ஜல்லிக்கட்டு 2023 : நிஸான் காரை தட்டிச் சென்ற வீரர் விஜய் - யார் யாருக்கு பரிசுகள்? அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு 2023 : நிஸான் காரை தட்டிச் சென்ற வீரர் விஜய் - யார் யாருக்கு பரிசுகள்?

Antony Ajay R

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு.

இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.

சிறப்பாக தொடங்கிய இன்றையப் போட்டி அதிரடியாக முடிவுக்கு வந்துள்ளது.

அவனியாபுரமே அதிரும் வகையில் 750க்கும் மேற்பட்ட காளைகள் நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்கள் களமிறங்கி ஆட்டம் கண்டனர்.

வாடிவாசலில் இருந்து சீறிவரும் காளைகளை சிறப்பாக மடக்கிய மண்ணின் மைந்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாடுகளும் பாத்திரம், அண்டா, பீரோ, என விதவிதமான பரிசுகளைத் தட்டிச்சென்றன.

வாடிவாசலில் திருமாவளவன், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் மாடுகளும் களம் கண்டன.

மாடுபிடி வீரர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒரு குழுவில் அதிக மாடுகளைப் பிடித்த வீரர்கள் அடுத்த குழுவுடனும் இணைந்து போட்டியிட்டனர். 7 சுற்றுகள் வரைப் போட்டி நடைபெற்றது.

அப்படி போட்டியிட்டு 28 மாடுகளைப் பிடித்து விஜய் என்பவர் முதலிடம் பிடித்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட நிஸான் காரை வென்றார்.

இரண்டாவது பரிசை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் வென்றார். இவருக்கு இருச்சக்கர வாகனம் வழங்கப்பட்டது

சிறந்த மாடாக மதுரைக் காத்தனேந்தல் ஊரைச் சேர்ந்த காமேஸ் என்பவரின் மாடு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் உதயநிதி சார்பில் வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்தை வென்றார்.

மேலும் சிறப்பாக விளையாடிய பலருக்கு பசுமாடு, வாஷிங்மிஷின் வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 45 பேருக்கு காயம் ஏற்பட்டது. 16 வயது சிறுவர்கள் இருவர் உட்பட 13 பேருக்கும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?