பாஜக கூட்டணி விவகாரம் : அதிமுக உட்கட்சியில் முரண்பாடு - என்ன நடக்கிறது? Twitter
தமிழ்நாடு

பாஜக கூட்டணி விவகாரம் : அதிமுக உட்கட்சியில் முரண்பாடு - என்ன நடக்கிறது?

Antony Ajay R

அதிமுக - பாஜக கூட்டணி கடந்த சில நாட்களாக சிக்கல் நிலவுகிறது. 2024ம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாஜக கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுக பிரிந்து செல்வதாக சில நாட்களாக அந்த கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றன.

குறிப்பாக கடந்த 18ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக அண்ணாமலை திமுக நிறுவனரான அண்ணா குறித்து பேசியது விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அண்ணாமலையும் அதிமுக தலைவர்களை தீவிரமாக விமர்சித்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் அதிமுக தலைவர்கள் டெல்லி சென்று மத்திய பாஜக தலைவர்களை சந்தித்தனர்.

அப்போது அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதிமுகவில் சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் தான் பிரச்னை இருக்கிறது எனப் பேசப்பட்டது.

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக-பாஜக கூட்டணியில் மாற்றம் இல்லை எனப் பேசியிருந்தார். ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், "18ம் தேதி சொன்ன முடிவில் எந்த மாற்றமும் இல்லை." எனக் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் வேறுவேறு கருத்தைக் கூறியிருப்பது கட்சியில் முரண்பாடுகள் இருப்பதை காட்டுவதாகவே உள்ளது.

மேலும் ஜெயக்குமார், "தமிழக மக்களின் பிரச்னைகளை பேசவே அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றனர்" என்றும் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?