அண்ணாமலை Twitter
தமிழ்நாடு

Rafale Watch : அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

NewsSense Editorial Team

சமீபத்தில் ஒரு கைக்கடிகாரத்தை வைத்துக் கொண்டு, ஆளும் திமுகவின் முக்கிய அமைச்சரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும் மோதிக் கொண்டதை செய்திகளில் பார்க்க முடிந்தது. அது என்ன பிரச்னை? அண்ணாமலை கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தில் அப்படி என்ன சிறப்பு? வாருங்க பார்ப்போம்.

ரஃபேல் வாட்ச் சர்ச்சை

"உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தாகச் சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?

வார் ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?" என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மின்சார & கலால் வரித் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் கணக்கிலேயே கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் முழுமையான பதிவைக் கீழே கொடுத்திருக்கும் ட்விட்டர் லிங்கில் பார்க்கலாம்.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களோ, இது குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விடையளித்தார். அதில், இது ரஃபேல் விமானத்தில் பயன்படுத்தப்பட்ட பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரம்.

உலகிலேயே இது போல பிரத்யேகமாக 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. இதன் பெயரே ரஃபேல் ஸ்பெஷன் எடிஷன் தான். ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை ஆகையால் அதன் பாகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வாட்சை வாங்கியுள்ளேன். நான் ஒரு தேசியவாதி.

இந்தியர்களைத் தவிர ரஃபேல் ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரங்களை யார் வாங்குவர்? நான் வாங்கி இருக்கும் வாட்ச், 500 வாட்களில் 149ஆவது என்றார். மேலும், என் உடலில் உயிர் ஓடும் வரை இந்த கைக்கடிகாரத்தை நான் அணிவேன் என்றும் கூறி இருந்தார் அண்ணாமலை.

"பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" என அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அண்ணாமலை பேசியவற்றை விமர்சித்தார்.

இந்தப் பஞ்சாயத்துக்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படி ரஃபேல் ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரத்தில் என்ன சிறப்பாக இருக்கிறது..?

இந்தக் கைக்கடிகாரத்தின் விலை சுமார் 5,200 யூரோ என சில வலைதளங்கள் சொல்கின்றன. இந்திய ரூபாய் மதிப்புப் படி சுமார் 4.5 லட்சம் ரூபாய்.

BR - CAL 301 ஆட்டோமேட்டிக் மெகானிக்கல் மூவ்மென்ட் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த வாட்சின் டிஸ்பிளே திரையிலேயே ரஃபேல் விமானத்தில் படம் இருக்கும். அதோடு தேதி கட்டுவது, 30 நிமிட டைமர் என பல வசதிகள் இருக்கின்றன.

42 மில்லி மீட்டர் அகலத்தில், கருப்பு நிற மேட் செராமிக் நிறத்தில் பலரின் கண்களைக் கவரும் இந்த வாட்சின் டிஸ்பிளே மீது, ஆண்டி ரெஃப்லெக்டிவ் சஃபயர் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். 100 மீட்டர் வரை வாட்டர் ரெசிச்ஸ்டென்ஸ் கொண்டது இந்த ரஃபேல் ஸ்பெஷல் எடிசன்.

பெல் & ராஸ் (Bell & Ross)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெல் & ராஸ் என்கிற நிறுவனம் தான், இந்த ரஃபேல் ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரத்தை உருவாக்கியது. எந்த சூழலிலும் கைக்கடிகாரம் துல்லியமாக இயங்குவது போன்ற உலகத் தர கைக்கடிகாரங்களைத் தயாரிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

இவர்கள் சாதாரண மனிதர்களுக்கான கைக்கடிகாரங்களைத் தாண்டி, விமானிகளுக்கான பிரத்யேக வசதிகளைக் கொண்ட வாட்களை உருவாக்குவதில் பெயர் எடுத்தவர்கள்.

1990களின் மத்தியிலேயே பெல் & ராஸ் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் விமானப் படைக்குத் தேவையான கைக்கடிகாரங்களை விற்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல Escadron de Chasse 2/4 La Fayette என்றழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டின், பாரம்பரியமான ஒரு பிரத்யேக விமானப் படை மற்றும் விண்வெளிப் படைக்கும் இவர்கள் தான் வாட்ச் சப்ளையர் என்றால் அவர்களின் தரத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

விண்வெளிப் படையினருக்கு கைக்கடிகாரங்களைத் தயாரிக்கும் பெல் & ராஸ், நீருக்கடியில் ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செல்லும் வீரர்கள் & ஆய்வாளர்கள் கட்டிக் கொள்ளவும் சில பிரத்யேக வாட்களைத் தயாரித்தது.

பெல் & ராஸ் ஹைட்ரோமேக்ஸ் 11,100 எம் என்கிற வாட்சைக் கட்டிக் கொண்டு நீருக்கடியில் 11,000 மீட்டர் ஆழம் வரை பயணிக்கலாம் என பெல் & ராஸ் 1990களில் கின்னஸ் சாதனை படைத்தது எல்லாம் வேற லெவல்.

இப்போது வரை இவர்கள் ஏவியேஷன், மரைன், வின்டேஜ் என மூன்று வகையான கைக்கடிகாரங்களை வெளியிடுகிறார்கள். முடிந்தால், போதிய அளவுக்கு பணம் இருந்தால், நீங்கள் ஒரு பெல் & ராஸ் வாட்சை வாங்கிப் பாருங்களேன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?