tholkappia poonga Twitter
தமிழ்நாடு

சென்னையில் இப்படி ஒரு டூரிஸ்ட் place இருக்கா? குடும்பத்தோடு செல்ல சூப்பர் weekend spot!

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, குடும்பத்துடன் செல்லக்கூடிய ஒரு இடத்தை பற்றி தான் சொல்ல போகிறோம். அப்படி என்ன இடம் என்றுதானே கேட்கிறீர்கள்? அழகான சுற்றுச்சூழல் அமைப்புடன் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் ஒரு இடம் சென்னையில் அமைந்துள்ளது.

Priyadharshini R

பொதுவாக சென்னையில் வசிப்பவர்கள், வாரம் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பார்கள். காலை எழுந்ததும் அரக்கபறக்க பஸ் அல்லது மெட்ரோ பிடித்து அலுவலகம் அல்லது கல்லூரிக்கு செல்வார்கள். இதில் உணவு சாப்பிடுவதற்கு எல்லாம் நேரமே இருக்காது. இதனாலே நகர வாழ்க்கையிலிருந்து வீக் எண்டில் ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள நினைப்பார்கள்.

அப்படி உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, குடும்பத்துடன் செல்லக்கூடிய ஒரு இடத்தை பற்றி தான் சொல்ல போகிறோம். அப்படி என்ன இடம் என்றுதானே கேட்கிறீர்கள்? அழகான சுற்றுச்சூழல் அமைப்புடன் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் ஒரு பூங்கா சென்னையில் அமைந்துள்ளது.

சிலருக்கு இது பற்றி தெரிந்திருந்தாலும், பலருக்கு இது குறித்து அறிய வாய்ப்பு குறைவு தான். அப்படி இவ்வளவு நாட்களாக பொதுமக்களின் கவனம் பெறாமலேயே இருந்த தொல்காப்பிய பூங்கா பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பிய பூங்கா திறக்கப்பட்டது. சுமார் 58 ஏக்கர் பரப்பளவில் 23 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இயற்கை எழில் கொஞ்சும் அழகான சுற்றுச்சூழலுடன் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன.

இந்த பூங்காவின் நடுவில் அழகான ஏரி அமைந்துள்ளது. நடைபயிற்சி செல்வோருக்கு ஏற்ற வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடர்ந்த வனப்பகுதி போல் காட்சியளிக்கும் இந்த பூங்காவில் ஏராளமான பறவைகள் மற்றும் பாம்பு, தவளை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. பூங்காவிற்கு செல்ல 20 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

நகருக்கு மத்தியில் அமைந்திருந்த பூங்கா குறித்து ஏன் பலரும் அறியவில்லை என்றால், அதற்கு பெயர் மாற்றிக்கொண்டே இருந்தனர். சில வருடங்கள் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. அதனாலேயே இது பொதுமக்களின் கவனம் பெறாமல் இருந்தது.

அதிமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, இந்த பூங்கா அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுபோன்று பல்வேறு காரணங்களுக்காக பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, கலைஞர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட இந்த பூங்காவை 20 கோடி ரூபாயில் சீரமைக்க ஏற்பாடுகள் செய்தது. மேலும், கருணாநிதி சூட்டிய தொல்காப்பிய பூங்கா என்ற பெயர் மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதற்கான பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது.

எப்போதும் வாகன இரைச்சலாக காணப்படும் சென்னைவாசிகளுக்கு இந்த அடையாறு பூங்கா நிச்சயமாக மன அமைதியை கொடுக்கும். இயற்கையான சூழல், குடும்பத்துடன் செல்ல நல்ல இடம் என்றே சொல்லலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?