சென்னை : திகிலான இடமில்லை ஆனால் பலரும் அறியாத சூப்பர் Weekend spots! Twitter
தமிழ்நாடு

சென்னை : Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் பட்ஜெட் spots!

Priyadharshini R

சென்னை என்றவுடன் கடற்கரைகள், கோயில்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் சுவரொட்டிகள் என பல விஷயங்கள் நினைவிற்கு வரும்.

முன்பு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் உண்மையிலேயே பன்முகத்தன்மை கொண்டது.

இந்த நகரம் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல நாட்டிலேயே மிகவும் பரபரப்பான, அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது இந்த சென்னை.

இது கடற்கரை நகரமாக இருப்பதால், நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டம் சுற்றுலா செல்ல சிறந்த நேரம்.

இந்த நகரம் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம், கடற்கரைகள், கோவில்கள், தென்னிந்திய உணவுகள் (பிரபலமான ஃபில்டர் காபி உட்பட) என பல விஷயங்களுக்கு பிரபலமாக இருந்தாலும், வழக்கத்திற்கு மாறான பல இடங்கள் சென்னையில் உள்ளன. அப்படிப்பட்ட இடங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

லிட்டில் மவுண்ட் சர்ச்

சென்னையில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவாலயம் தான் லிட்டில் மவுண்ட் சர்ச். 16 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று இருக்கும் தேவாலயம் 1970 இல் பழைய தேவாலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு கட்டப்பட்டது.

தேவாலயத்தில் ஒரு குகை ஒன்று உள்ளது. அந்த குகையே இறைத்தூதரின் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான உறைவிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. பசுமைக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் உள்ளது.

தியோசாபிகல் சொசைட்டி

நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்பினால், தியோசோபிகல் சொசைட்டியின் அழகான 'ஹடில்ஸ்டன் தோட்டம்’ சிறந்த இடம். 250 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த தோட்டங்களில் தேவாலயம், மசூதி, புத்த கோவில், இந்து கோவில் ஆகியவை உள்ளன.

பூங்கா காலை 8:30 மணிக்கே திறந்திருக்கும். இது இயற்கையின் காட்சிகள், ஒலிகளுடன் அமைதியான சுற்றுப்புறங்களை அனுபவிக்க சரியான நேரமாகும்.

தோட்டத்தின் சிறப்பம்சமாக 450 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இது நாட்டிலேயே மிகப் பழமையானது மற்றும் மிகப்பெரியது. புத்தகங்கள் வாங்கும் ஆர்வம் இருந்தால் புத்தகக் கடையும் உள்ளது.

கலாக்ஷேத்ரா

இந்த அகாடமி இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை குறிப்பாக பரதநாட்டிய நடனம், கந்தர்வ வேத இசை துறையை மேம்படுத்தும் ஒரு சிறந்த நிறுவனம் ஆகும்.

ருக்மிணி தேவி அருண்டேலால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இப்போது நுண்கலை கல்லூரி, ருக்மணி தேவி அருங்காட்சியகம், தியேட்டர் மற்றும் கைவினைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பெசன்ட் நகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் வளாகத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடம் கலை மற்றும் கைவினை ஆர்வலர்களின் புகலிடமாக உள்ளது.

கைத்தறி புடவைகள் கையால் நெய்யப்படுவதையும், துணிகள் கை வர்ணம் பூசப்பட்டு ப்ளாக் அச்சிடப்படுவதையும் நீங்கள் பார்க்க முடியும். புதுமையான வண்ண கலவைகள் மற்றும் வண்ணங்களுக்கு பெயர் பெற்ற புடவைகள் கையால் நெய்யப்படுகிறது. இங்கு உண்மையான காஞ்சிபுரம் நெசவு பாரம்பரியத்தை பின்பற்றுகின்றன.

அமேதிஸ்ட் கஃபே

ராயப்பேட்டையில் அமைந்துள்ள அமேதிஸ்ட் கஃபே மற்ற கஃபேயை விட ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. ஏராளமாக பசுமையுடன், கற்களால் ஆன பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கஃபே உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. முற்றிலும் ஸ்டைலான மற்றும் வசதியான அமைப்பு மட்டுமில்லாமல் இந்த இடம் சுவையான உணவுகளுக்கும் பெயர்பெற்றது. பழங்கால மரச்சாமான்கள் இந்த இடத்திற்கு மேலும் அழகைக் கூட்டுகிறது.

மொத்தத்தில், தனிமையை அனுபவிக்கவும், அந்த இடத்தின் அழகில் திளைக்கவும் இது ஒரு சிறந்த இடமாகும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?