கூவம் : இந்தியாவிலேயே மாசுபாடான நதி - அதிரவைத்த ஆய்வறிக்கை! Twitter
தமிழ்நாடு

கூவம் : இந்தியாவிலேயே மாசுபாடான நதி - அதிரவைத்த ஆய்வறிக்கை!

Antony Ajay R

கூவம் சென்னையிலிருக்கும் அழுக்கின் அடையாளமாக மாறியிருக்கிறது.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களையும் பளிங்கு கட்டடங்களையும் கொண்டுள்ள சென்னை தான் துர்நாற்றம் வீசும் கூவத்தையும் கொண்டுள்ளது.

சென்னையின் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திய மிகப் பெரிய முரண் இது. இதன் விளைவாக இந்தியாவிலேயே மாசுநிறைந்த ஆறாக கூவம் ஆறு உருவாகியிருக்கிறது.

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவிலேயே மாசு நிறைந்த ஆறாக கூவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியா முழுவதும் உள்ள 311 ஆறுகளில் 4000 இடங்களில் இருந்து தண்ணீரை சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வுகள் பயோமெடிகல் ஆக்சிஜன் டிமாண்ட் என்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் படி ஒரு ஆற்றில் இருந்து எடுக்கப்படும் ஒருலிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்த எவ்வளவு ஆக்சிஜன் தேவைப்பது என்பதைப் பொறுத்து அதன் சுத்தத்தன்மை அளக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்த குறைந்த ஆக்சிஜனே தேவைப்படுகிறது என்றால் அந்த ஆறு சுத்தமானதாகவும் அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்றால் அது அசுத்தமான ஆறாகவும் கருதப்படும்.

இதன்படி, ஆவடி முதல் சத்யாநகருக்கு இடைப்பட்ட கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்த 345 மி.கிராம் ஆக்சிஜன் செலவாகும்.

இது இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் சபர்மதி நதியுடன் ஒப்பிடும் போது (292 மி.கி) 53 மி.கிராம் அதிகம். மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேசத்தின் பஹேலா நதி (287 மி.கி) உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் பலவும் மோசமான நிலையில் இருப்பதனை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் இந்த நதிகளின் தர மேம்பாட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாகவே இந்த அறிக்கை பேசுகிறது.

தமிழ் நாட்டில் உள்ள 12 ஆறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதில் 10 ஆறுகள் பரிந்துரைக்கப்பட்ட தர அளவுக்கு கீழே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அடையாறு, அமராவதி, பவானி, காவேரி, கூவம், பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, விசிஷ்தா மற்றும் திருமணிமுத்தாறு ஆகியவையே அந்த 10 ஆறுகள்.

குறிப்பாக 2019ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் கடந்த ஆண்டுகளில் தாமிரபரணி மற்றும் கூவம் ஆறுகள் அதிகமாக மாசடைந்துள்ளன.

நாட்டிலேயே அதிக மாசான நதியாக கூவம் உருவாகியிருக்கும் சூழலில், அரசு எடுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை, சுத்தீகரிப்பு நிலையங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதே மக்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது.

மேலும் கழிவு நீர் சாக்கடைகள் கூவத்தில் கலப்பதை தடுத்து வேறு விதமான தீர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?