ராண்டா செடார் டிவிட்டர்
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் : கடைக்குட்டி சாம்பியன் ராண்டா செடார் - யார் இந்த 8 வயது செஸ் வீராங்கனை?

Keerthanaa R

உலகின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் பிரக்னானந்தா, அவரது சகோதரி என நட்சத்திர வீரர்களை செஸ் ஒலிம்பியாட் களத்தில் பார்க்கிறோம். உலகின் தலைசிறந்த செஸ் சாம்பியன்களும் இந்த போட்டிக்காக சென்னை வந்தடைந்துள்ளனர். போட்டிகள் துவங்கி இன்று நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், வெளி நாட்டு வீரர்களில் ஒருவர் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இணையத்தை கலக்கி வரும் அந்த வீராங்கனை ஒரு 8 வயது செஸ் சாம்பியன். ராண்டா செடார் என்ற அந்த சிறுமி பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர். ராண்டாவுடன் சேர்ந்து தக்வா ஹமோரி மற்றும் சாரா அல்மோரி என்ற வீராங்கனைகளும் ஒலிம்பியாடில் பங்கேற்கின்றனர்.

ராண்டா ஆறு வயதிற்கு உட்பட்டோர் தரவரிசையில், உலகின் இரண்டாவது சிறந்த செஸ் வீராங்கனையாவர். பாலஸ்தீன மகளிருக்கான சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று ராண்டா இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்கும் வாய்ப்பை வென்றார் ராண்டா

பங்கேற்ற எல்லா செஸ் சாம்பியன்ஷிப்பிலும், இளம் வீராங்கனையான ராண்டாவை தோற்கடிப்பது பெரும் சவாலாக உள்ளது இவரது ஆப்போனென்ட்டுகளுக்கு. ஐந்து வயது முதல் செஸ் விளையாடி வரும் ராண்டா தனது தந்தையிடம் இருந்து இந்த விளையாட்டை கற்றார். ராண்டாவின் மூத்த சகோதரரும் சர்வதேச செஸ் மாஸ்டர்களிலில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் விளையாடுவதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் ஓவியம் வரைவது தான் ராண்டாவின் பொழுதுபோக்காம். ராண்டாவுடன் வந்திருக்கும் மற்ற வீராங்கனைகள், ராண்டாவுடன் தாங்களும் இந்த போட்டியில் பங்குகொள்வதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தனர்.

மேலும் இவர்களுக்கென்று பயிற்சியாளர்களோ, பயிற்சிக் கூடங்களோ தனியாக இல்லை என்றும், இன்று வரை அவர்கள் சுயமாக செச் விளையாட பயிற்சி பெற்று வருவதாக கூறினர்.

பார்ப்பதற்கும் க்யூட்டாக இருக்கும், தற்போது ராண்டா தான் கடந்த மூன்று நாட்களாக டாக் ஆஃப் தி டவுன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?