மதுரை: அண்ணா vs முத்துராமலிங்க தேவர் - 1956ல் நடந்தது என்ன? ட்விட்டர்
தமிழ்நாடு

மதுரை: அண்ணா vs முத்துராமலிங்க தேவர் - 1956ல் நடந்தது என்ன?

மதுரையில் மீனாட்சிக்கு இரத்த அபிஷேகம் நடத்தப்படும் என தேவர் எச்சரித்ததாகவும், அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டதாகவும் அண்ணாமலை பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?

Antony Ajay R

தமிழகத்தில் நீண்ட நாட்களாக கூட்டணியில் இருந்துவரும் அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இடையில் விரிசல் விழக் காரணமாக இருந்திருக்கிறது அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது. உண்மையில் மதுரையில் நடந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்.

பாஜக மேடையில் அண்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று அண்ணாமலை, அண்ணா மதுரையில் 1956ம் ஆண்டு நடந்த தமிழ் சங்க விழாவில் சங்கப்பாடல் பாடிய மணிமேகலை என்ற குழந்தையை வாழ்த்தி பேசினார். அப்போது இது முந்தைய காலம் என்றால் கடவுளின் ஆசியால் தான் இந்த குழந்தை நன்றாக பாடியது எனக் கூறிவிடுவார்கள். இது பகுத்தறிவு காலம், யாரைப் பாராட்ட வேண்டும் என்பது நமக்குத் தெரியும் என அண்ணா பேசியதாகவும்.

அதனால் கோபமடைந்த முத்துராமலிங்கத் தேவர், அண்ணாவை கோபமாக கண்டித்ததாகவும். இன்னொரு முறை கோவிலில் நாத்திகம் பேசினால் மீனாட்சிக்கு பாலாபிஷேகத்துக்கு பதிலாக இரத்த அபிஷேகம் செய்வோம் என எச்சரித்ததாகவும், அவருக்கு பயந்து அண்ணா கட்சிக்காரர் வீட்டில் ஒளிந்திருந்துவிட்டு, மன்னிப்புக் கேட்டு மதுரையில் இருந்து சென்றதாகவும் அண்ணாமலைப் பேசினார்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அண்ணாமலை மீது சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

அண்ணாமலை தான் கூறிய செய்தி உண்மைதான் எனவும், இந்த தகவல் 1956, ஜூன் 1,2,3,4 தேதிகளில் வெளியான தி இந்து ஆங்கில பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது எனவும் கூறினார்.

பேரறிஞர் அண்ணா

அண்ணாமலை சொன்ன நாளிதழ்களில் உள்ள செய்தியின் படி, மதுரை மீனாட்சி அம்மான் ஆலய மேல ஆடி வீதியில் பாராட்டு நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

அப்போது பாடிய சிறுமியை பாராட்டிய அண்ணா, "இந்த சிறுமி சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழில் இயற்றப்பட்ட பாடலை மிக அழகாக பாடினாள். இதைக் கூட பக்தி சிரோன்மணிகள் இந்த சிறுமி உமையம்மையின் புனித பாலை அருந்தியதால் தான் இப்படி பாட முடிந்தது எனக் கூறிவிடுவார்கள். நாம் இப்போது இத்தகைய புரட்டுகளில் இருந்து மீண்டு உண்மை எது என்பதை பகுத்தறிந்து தேறும் நிலைக்கு வந்துவிட்டோம்" எனக் கூறியிருக்கிறார்.

மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் நடந்த நிகழ்ச்சியில் நாத்திக கருத்துக்களை அண்ணா பேசியதைக் கண்டித்தார் தேவர். மேலும் தொடக்க விழாவில் 'ஆரியர்கள் - திராவிடர்கள்' என்ற கூற்றுத் தொடர்பாக சி.ராஜகோபாலாச்சாரி பேசியதை விமர்சித்து மூன்று நாட்களாக வெவ்வேறு பேச்சாளர்கள் பேசியது முறையற்றது என்றும் கூறியிருக்கிறார்.

முத்துராமலிங்க தேவர் பேசிய பிறகு எவ்வித இடையூறும் இல்லாமல் விழா தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.

நியூஸ் 18 தளத்தில் இதுகுறித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சௌந்தரராஜன் அந்த சம்பவத்தின் போது அவருக்கு 15 எனக் குறிப்பிட்டார். அவர், "அண்ணா பேசிய பிறகு மேடையில் பேசிய முத்துராமலிங்க தேவர் ஒரு அசிங்கமான வார்த்தையால் அண்ணாவைத் திட்டினார். அப்போது திமுக தலைவர்கள் கொதித்துப்போயினர். ஆனால், அண்ணா யாரையும் எதிர்வினையாற்ற விடவில்லை.

முதுகுளத்தோர் சம்பவத்தின் போது அண்ணா தேவரை எப்படி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனால், அவர் யாரையும் அவதூறாக பேசி அங்கு நடக்கும் வன்முறையை அதிகரித்துக்குவிடக் கூடாது. கொதிப்பை அணைப்பதாகத்தான் நம் நடவடிக்கை இருக்க வேண்டும் எனக் கூறினார்." என்று பேசினார்.

இந்த சம்பவம் குறித்து தராசு ஷ்யாம் எழுதிய "வீரத்திருமகனார் நேதாஜி - முத்துராம லிங்க தேவர் ஒப்பீடு" என்ற நூலில் குறிப்புகள் இருக்கிறது.

அண்ணா பேசியதற்கு மறுநாள் பேசிய தேவர், "ஆலயத்தில் தேவ நிந்தனைப் பேச்சு நடந்தது நல்லதல்ல. இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது விழாவை தமுக்கம் மைதானத்துக்கு மற்றிவிட வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

விழாவை நடத்திய பி.டி.ஆர் தேவரின் கருத்துக்களை ஏற்கவில்லை. விழாவில் அவரவர் கருத்துக்களை அவரவர் சொல்ல உரிமை உண்டு எனப் பேசியுள்ளார்.

மறுத்துப் பேசிய தேவர், "எக்காரணத்தைக் கொண்டும் கோவிலில் தேவ நிந்தனை பேச்சு பேசக் கூடாது. முதல் நாள் அண்ணாதுரைப் பேசியது பக்தர்களை புன்படுத்திவிட்டது. விழா நிகழ்ச்சிகளை தமுக்கம் மைதானத்தில் நடத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மறுநாள் முதல் விழா தமுக்கம் மைதானத்துக்கு மாற்றப்பட்டது என அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இரத்த அபிஷேகம் செய்யப்படும் என தேவர் சொல்லியதாக அண்ணாமலைக் கூறுவதோ, அண்ணா மன்னிப்புக்கேட்டதோ நடைபெறாத நிகழ்வுகள் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?