சிறுவாணி முதல் பரம்பிகுளம் வரை: கோவையில் ஒரே நாளில் சுற்றிப்பார்க்க பட்ஜெட் ஸ்பாட்ஸ் twitter
தமிழ்நாடு

சிறுவாணி முதல் பரம்பிகுளம் வரை: கோவையில் ஒரே நாளில் சுற்றிப்பார்க்க பட்ஜெட் ஸ்பாட்ஸ்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் கோயம்புத்தூர், வேகமாக வளர்ந்து வரும் இந்திய நகரங்களில் ஒன்று. கோவையில் நாம் ஒரு நாளைக்குள் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. அவற்றில் சில...

Keerthanaa R

கோவை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது இதமான வெப்பநிலை, மேற்கு தொடர்ச்சி மலைகள், சிறு குழந்தை என்றாலும் கூட பெரிய மனிதர் போல வாங்க போங்க என்று வாஞ்சையாக பேசும் கொங்கு தமிழ்.

கோவை அது பெற்றுள்ள வணிக முக்கியத்துவத்திற்காக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிக பருத்தி உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் கோயம்புத்தூர், வேகமாக வளர்ந்து வரும் இந்திய நகரங்களில் ஒன்று.

கோவையில் நாம் ஒரு நாளைக்குள் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. அவற்றில் சில...

சிறுவாணி நீர்வீழ்ச்சி

கோவையிலிருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிரது சிறுவாணி. இது இயற்கையின் மடியில் தவழ்ந்துக் கொண்டிருக்கும், அடர்ந்த காட்டிற்குள் அமைந்திருக்கும் ஒரு அழகிய நீரூற்று.

சிறுவாணி நதிக்கரை, சிறுவாணி அணை மற்றும் நீர்வீழ்ச்சி கோவையின் பிரதான நீராதாரங்களில் ஒன்று. இதன் தண்ணீர் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஐஸ் வாட்டர் போல சில்லென்றே இருக்கும். சிறுவாணி நீர் உலகின் இரண்டாவது இனிப்பான தண்ணீர் என்று அறியப்படுகிறது.

மலம்புழா அணை

கோவையிலிருந்து கேரளா செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த மலம்புழா கார்டன்ஸ் மற்றும் அணை நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.

இங்கு இருக்கும் தொங்குபாலம் பிரபலம். இது தான் தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே பாறை தோட்டம் ( rock cut garden). இந்த தோட்டம் முழுவதுமே உடைந்த வளையல்கள், ஓடுகள் தூக்கியெறியப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் போன்ற வேஸ்ட் மெட்டீரியல்கள் வைத்து கட்டமைக்கப்பட்டது.

இங்கு நாம் ரோப் காரில் பயணிக்கலாம்.

பரம்பிகுளம் புலிகள் காப்பகம்

கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் அமைந்திருக்கிறது பரம்பிகுளம் புலிகள் காப்பகம். இங்கு டிரெக்கிங் செய்யும் வசதிகள் உள்ளன.

இங்கு கடர், மலசர், முடுவர் மற்றும் மல மலசர் ஆகிய பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். 1962ல் இருந்து செயல்பட்டுவரும் இந்த காப்பகத்தில் கன்னிமாரா தேக்கு மரம் பழமையான மரங்களில் ஒன்று

தொட்டபெட்டா மலைகள்

கோவையின் அடையாளங்களில் ஒன்றான, ஊட்டியில் இருக்கும் பிரபலமான சுற்றுலா தலம் தொட்டபெட்டா. இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 8,606 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு ஒரு டெலிஸ்கோப் ஹவுஸ் அமைக்கப்பட்டிருகிறது. இதன் மூலம் பரந்து விரிந்த நீலகிரி மலைகளின் அழகை கண்டு ரசிக்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?