அஜித் குமார் பகாசூரன் படத்தை பாராட்டினாரா? | Fact Check
அஜித் குமார் பகாசூரன் படத்தை பாராட்டினாரா? | Fact Check  Twitter
தமிழ்நாடு

அஜித் குமார் பகாசூரன் படத்தை பாராட்டினாரா? | Fact Check

Antony Ajay R

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன் ஜி.

இவரது இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது பகாசூரன் திரைப்படம்.

பொதுவாக மோகன் ஜி-யின் திரைப்படங்கள் குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக இருப்பதனால் அதிகமாக விமர்சிக்கப்படும்.

இதனால் அவருடைய படங்களில் நடிப்பவர்கள் மீதும் கேள்விகள் எழுப்பப்படும்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் பகாசூரன் படத்தைப் பார்த்து பாராட்டியதாக தகவல்கள் பரவி வந்தன.

இதனை போஸ்டராக கூட விளம்பரப்படுத்தினர். ஆனால் இந்த தகவல் உண்மையா?

"மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் பார்க்க வேண்டிய படம் பகாசூரன். இந்திய சினிமாவின் முக்கியமான படம் இது" என அஜித் குமார் கூறியதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதில் அஜித் மற்றும் மோகன் ஜி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

இந்த போஸ்டர் சிவகாசியில் ஒரு திரையரங்கின் சார்பாக ஒட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.

உண்மை என்ன?

பிரபல சினிமா ட்ராக்கரான ரமேஷ் பாலா தனது ட்விட்டரில் இந்த தகவல் பொய்யானது எனக் கூறியுள்ளார்.

பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. வசூல் ரீதியாக மோகன் ஜியின் முந்தைய படங்களை விட பின்தங்கியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?