பொன்முடி : திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்? பாஜக, அதிமுக ரியாக்‌ஷன் என்ன? Twitter / Vikatan
தமிழ்நாடு

பொன்முடி : திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்? பாஜக, அதிமுக ரியாக்‌ஷன் என்ன?

பொன்முடி குற்றவாளி என்ற அறிவிப்புக்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர முடியும். சட்டப்படி, 3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவாக தண்டனைப் பெற்றால் உயர்நீதிமன்றத்திலேயே ஜாமீன் பெற முடியும்

Antony Ajay R

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு இன்று தண்டனையை அறிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் படி ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறியப்பட்டாலே தகுதி இழக்கிறார்.

குற்றவாளி என்ற அறிவிப்புக்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர முடியும்.

சட்டப்படி, 3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவாக தண்டனைப் பெற்றால் உயர்நீதிமன்றத்திலேயே ஜாமீன் பெற முடியும். 3 ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனைப் பெற்றால் உச்சநீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற முடியும்.

அமைச்சர் பொன்முடி

இன்று தண்டனை அறிவிக்கப்பட்டாலும் அமைச்சரும் அவரது மனைவியும் இன்றே சிறை செல்லப்போவது இல்லை. மேல் முறையீட்டுக்காக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

எனினும், தண்டனை பெற்றிருப்பதனால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை இழக்கிறார் பொன்முடி.

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

உச்சநீதிமன்றத்தின் தண்டனை விவரங்கள் சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி இழப்பு அறிவிப்பாணையை பேரவை செயலகம் வெளியிடும்.

தகுதி இழப்புக்குப்பின் திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும்.

பாஜக, அதிமுக வரவேற்பு

பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை பாஜக, அதிமுக கட்சிகள் வரவேற்றுள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை தாமதமாக வந்தாலும் சிறப்பான தீர்ப்பு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்" எனக் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?