கொடைக்கானல்  IStock
தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று மட்டும் நுழைவுக் கட்டணம் இல்லை - ஏன் தெரியுமா?

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மர சோலை, தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஒருநாள் மட்டும் நுழைவுக் கட்டணம் இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

Priyadharshini R

பொதுவாக விடுமுறைக்கு குளர்ச்சியான இடத்தை தேடி செல்வது வழக்கம். தமிழகத்தை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, மூணார், ஏற்காடு, கொல்லி மலை, ஜவ்வாது மலை, சிறு மலை என்று எல்லா பக்கமும் மக்கள் குவிந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கொடைக்கானல் உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டினரையும் ஈர்த்து வருகிறது.

ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்ப நிலை இருக்கும் கொடைக்கானலுக்கு இந்த மாதம் செல்வது இன்னும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.

கொடைக்கானல் என்று எடுத்துக்கொண்டால் கோக்கர்ஸ் வாக், தூண் பாறைகள், பிரையண்ட் பூங்கா, பைன் மரக்காடுகள், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, வெள்ளி நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், செண்பகனூர் அருங்காட்சியம், மன்னவனூர் சூழல் சுற்றுலா, டால்பின் நோஸ் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, தற்கொலை முனை, பேரிஜம் ஏரி, குணா குகைகள், குறிஞ்சி ஆண்டவர் கோயில் என சுற்றி பார்ப்பதற்கு பல அழகிய இடங்கள் உள்ளன.

கொடைக்கானலில் இன்று மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்து வனத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அக்டோபா் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று மட்டும் சுற்றுலா தலங்களுக்கான எண்டரி கட்டணத்தை ரத்து செய்துள்ளது வனத்துறை.

அதன்படி, கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மர சோலை, தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஒருநாள் மட்டும் நுழைவுக் கட்டணம் இல்லை.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கொடைகானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?