Guns (rep) Canva
தமிழ்நாடு

Loan கொடுக்க மறுத்த வங்கி: துப்பாக்கியுடன் சென்று மிரட்டிய சாமியார் - என்ன நடந்தது?

Keerthanaa R

துப்பாக்கியுடன் வங்கிக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை சாமியார் ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் குடவாசல் அருகே துப்பாக்கியுடன் வங்கிக்கு சென்று, புகைப்பிடித்து கொண்டே அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியுள்ளார் சாமியார் ஒருவர். இதனை ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார் அவர். 

குடவாசல் அருகே மூலங்குடி என்ற பகுதி உள்ளது. இந்த ஊரை சேர்ந்த திருமலை சாமி என்ற சாமியார், இடி மின்னல் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை லைவ் ஸ்ட்ரீம் செய்தார். அதில் காவி உடை அணிந்துள்ள அவர், கையில் காவி துண்டால் மறைக்கப்பட்ட பொருள் ஒன்றை எடுத்துசெல்கிறார். ஜீப் ஒன்றில் ஏறி அவர் உட்கார, காவியுடை அணிந்த மற்றொவர் அவரை ஓர் இடத்திற்கு கூட்டிச் செல்கிறார்.

அவர்கள் மஞ்சக்குடி என்ற பகுதியில் இருக்கும் சிட்டி யூனியன்  வங்கிக்கு சென்றனர். உள்ளே சென்ற சாமியார் தன்  கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளை மிரட்ட, ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். துப்பாக்கியுடன் அங்குமிங்குமாக நடப்பதும், நாற்காலியில் கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து நீண்ட நேரமாக அவர்களை மிரட்டியுள்ளார். அவரை சமாதானம் செய்ய வங்கி ஊழியர்கள் முயன்றும் எந்த பயனும் இல்லை. 

வங்கியில் நடந்தது அனைத்தையும் அந்த சாமியார் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார். சாமியார் ஒருவர் துப்பாக்கியுடன் வங்கி ஊழியர்களை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, சாமியார் திருமலையை போலீசார் கைது செய்தனர்.

சொத்து பத்திரம் இல்லாமல், கல்விக் கடன் தர முடியாது என வங்கி மேலாளர் கூறியதால் துப்பாக்கியுடன் சென்று அவர்களை மிரட்டியதாகவும்  விசாரணையில் அவர் தெரிவித்தார். 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?