டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் தென் மாவட்டத்திற்கு உரித்தான தமிழை நகைச்சுவையாகப் பேசி வெளியிடும் வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கின்றனர்.
இந்தியாவில் டிக் டாக் தடை செய்தபின், யூடியூப், இன்ஸ்டாகிராம் என வலம் வந்த ஜி.பி.முத்துக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
ஜி.பி.முத்து அவ்வப்போது மற்ற யூடியூப் சேனல் நடத்துபவர்களுடன் வீடியோக்களை பதிவிடுவார். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனை ஜிபிமுத்து சந்திக்க விரும்பியுள்ளார்.
அதற்கேற்ப ஒரு கல்லூரியில் ஜிபிமுத்துக்கு ஷூட்டிங் இருந்துள்ளது. சந்தர்ப்பத்தை டிடிஎஃப் வாசனுடனான பயணமாக மாற்ற எண்ணினார் ஜிபி முத்து. இருவரும் சேர்ந்து ஒரு பைக் ரைடுக்கும் திட்டமிட்டனர்.
2k கிட்ஸை கவர்ந்த பைக் ரைடரான டிடிஎஃப் வாசனுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.
அதன்படி வாசன் நேராக ஜிபி முத்து சொன்ன இடத்திற்குச் சென்றார். அங்கிருந்து அவர் பங்கேற்கும் கல்லூரியின் தூரம் 20 கி.மீ. ஆகும்.
முத்துவின் வாய் அசையும் அளவுக்கு டிடிஎஃப் வாசன் வேகமாக பைக்கை ஓட்டி செல்கிறார். நடுநடுவே லாரிகளுக்கு இடையிலும் நுழைந்து முத்துவை பயமுறுத்தினார்.
பின்னர் இரு கைகளையும் எடுத்துவிட்டு ஓட்டினார். இதையடுத்து அண்ணா வண்டியை தூக்கட்டுமா என வாசன் கேட்டார்.
அதற்கு முத்துவோ அய்யோ வேண்டாம் ஆளை விடுங்க தம்பி என்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானதையடுத்து, சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust