பிரசாந்த் கிஷோர் Vs மம்தா பானர்ஜி: ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்

 

NewsSense

தமிழ்நாடு

பிரசாந்த் கிஷோர் Vs மம்தா பானர்ஜி: ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் - Morning News Wrap

NewsSense Editorial Team

பிரசாந்த் கிஷோர் Vs மம்தா பானர்ஜி

பிரசாந்த் கிஷோர் தலைமையில் செயல்படும் I-PAC நிறுவனத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்படுத்திய 5 ஆண்டு கால ஒப்பந்தத்தை மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஐ-பேக் நிறுவனத்துடன் கரம் கோர்த்தாஎ மம்தா பானர்ஜி. தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் பல்வேறு மாநிலங்களில் கட்சி வேரூன்ற மம்தா பானர்ஜி விரும்பிய நிலையில், பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் கோவா மாநிலத்தில் கட்சி களமிறங்கியது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் ஐ-பேக் நிறுவனத்துடனான உறவில் விரிசல் உண்டானது.

பின்னர், திரிணாமுல் காங்கிரசின் உட்கட்சி விவகாரங்களில் I-PAC அமைப்பு தலையிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனால், மம்தா பானர்ஜி - பிரசாந்த் கிஷோர் இடையே விரிசல் அதிகரித்தது. கட்சியில் 'ஒரு தலைவர் ஒரு பதவி' என்ற முழக்கத்தை மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட இளம்தலைவர்கள் எழுப்ப I-PAC ஆலோசனையே காரணம் என பல மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

"ஒரு தலைவர் ஒரு பதவி" கொள்கைக்கு ஆதரவாக தனது ட்விட்டர் கணக்கில் அனுமதியின்றி பதிவிட்டதாக ஐ-பேக் மீது இணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா குற்றம்சாட்டியது மம்தாவிடம் மேலும் அனலைக் கூட்டியது. அதனால், ஐ பேக்-கின் 5 ஆண்டு ஒப்பந்தத்தை மம்தா ரத்து செய்துள்ளதாக மூத்த தலைவர் மதன் மித்ரா தெரிவித்தார்.

பி.எஸ்.எல்.வி. சி 52 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது

புவியை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோள் இ.ஓ.எஸ்., 04 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) இன்று திங்கள் காலை 5;59 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் பவன் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்., 04 என்ற செயற்கை கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

புவிபைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இ.எஸ்.ஓ., 04 செயற்கை கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் 1710 கிலோகிராம் எடை கொண்டது. பூமியிலிருந்து 579 கி.மீ உயரத்தில் நிறுவப்பட உள்ளது. இது பூமியின் தட்பவெப்பநிலை, விவசாயம், வனவளம் குறித்த தெளிவான புகைப்படங்களை எடுக்கக் கூடியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் : எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும்

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொலைபேசியின் வாயிலாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், “

மம்தா பானர்ஜி என்னைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளைப் பற்றியும், அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் போக்கைப் பற்றியும் தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார்,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்று கூடிச் சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திமுக.வின் உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப் படுத்தினேன்,” என்றுள்ளார்.

“எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?