நீலகிரி: அடுக்கடுக்கான மலைகள், அடர்ந்த காடு - தமிழகத்தில் இப்படி ஒரு வனப்பகுதியா? மசினகுடி / Canva
தமிழ்நாடு

நீலகிரி: அடுக்கடுக்கான மலைகள், அடர்ந்த காடு - தமிழகத்தில் இப்படி ஒரு வனப்பகுதியா?

இப்படிப்பட்ட பசுமையான இளமை மாறாத கிராமத்துக்கு செல்வது பலருக்கும் கனவாக இருக்கும் அல்லவா? இது அமைதியானது என்றாலும் அருகிலேயே முதுமலை வனப்பகுதி இருப்பதனால் த்ரில்லுக்கும் பஞ்சம் இருக்காது.

Antony Ajay R

தமிழகத்தில் பல்வேறு வகையான சுற்றுலாத்தலங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இயற்கை சுற்றுலா என்றாலே நம்மவர்களின் மனம் கேரளா, கர்நாடகா, வடகிழக்கு அல்லது வெளிநாடுகளைத்தான் நாடுகிறது.

இதிலிருந்து நீலகிரி மலைகளுள் இருக்கும் இயற்கை வனப்புமிக்க வனப்பகுதிகள் பற்றி நாம் அறியவில்லை என்று தெரிகிறது.

மசினகுடி முதுமலை புலிகள் காப்பகத்துக்கான நுழைவு கிராமமாக இருக்கிறது. இந்த பசுமையான ஊர் நீலகிரியின் உயிர் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

மசினகுடி மிகவும் அமைதியாக இயற்கையின் அழகு தேயாத கிராமமாக இருப்பதற்கு காரணம் அது நகரமயமாதலில் இருந்து விலகியிருப்பதுதான்.

அங்குள்ள அடுக்கடுக்கான மலைகளும் வளைந்து பாயும் நதிகளும் நம்மை இயற்கையோடு ஒட்டியிருப்பதாக உணரவைக்கும்.

இப்படிப்பட்ட பசுமையான இளமை மாறாத கிராமத்துக்கு செல்வது பலருக்கும் கனவாக இருக்கும் அல்லவா? இது அமைதியானது என்றாலும் அருகிலேயே முதுமலை வனப்பகுதி இருப்பதனால் த்ரில்லுக்கும் பஞ்சம் இருக்காது.

115 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடகாவில் நாகர்ஹோல் வனப்பகுதி இருக்கிறது.

மசினகுடியில் தங்கி சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் வனப்பகுதிகளுக்கு செல்லலாம். இல்லை என்றால் தெப்பக்காடு யானைகள் முகாம் சிறந்த தேர்வாக இருக்கும்.

மசினகுடி நகரமயமாகாத கிராமம் என்றாலும் இங்கு தங்குமிடங்களை தேடுவது சிரமாக இருக்காது. மசினகுடியில் வாழும் நட்புறவான உள்ளூர் மக்களுடனும் நாம் கலந்துரையாட முடியும்.

விலங்குகள், தாவரங்கள், மலைகளை விட நீலகிரி மலைகளில் வாழும் மக்களின் பாரம்பரிய வாழ்க்கைமுறை சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பது நிச்சயம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?