மணிரத்னம் இயக்கத்தில் 2010ல் வெளியான திரைப்படம் ராவணன். இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயின் இண்ட்ரோ நன்னாரே பாடலில் தொடங்கும். இந்த பாடலின் இரண்டாவது சரணத்தில், அவர் தன் காதலனை திருமணம் செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதிவைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுவார்.
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதில், “பக்கத்து வீட்டு அக்கா” என்று பதிவிடப்பட்டிருந்த எண்ணின் வாட்ஸ் அப் ஸ்டோரியில் அக்கா இந்த நன்னாரே பாடலை ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு, காதலனுடன் சென்றதாக கூறப்பட்டது.
நன்னாரே பாடலின் அந்த குறிப்பிட்ட வரிகள்,
கவிஞர் வைரமுத்து
விடை கொடு சாமி
விட்டு போகின்றேன் உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே வாசல்
தாண்டுகிறேன் உந்தன்
திண்ணைக்கு நன்றி
சொன்னேன் போ
கதவுகள் திறக்கும்
வழி எந்தன் கனவுகள்
பறக்கட்டுமே போகின்ற
வழி முழுக்க அன்பு
பூக்களே மலரட்டுமே
இதனால், அந்த பாடல் இணையவாசிகள் இடையே வைரலானது. அக்கா என்ற ஹாஷ் டேக், இந்த குறிப்பிட்ட வரிகளை வைத்து பல மீம்களும் க்ரியேட் செய்யப்பட்டது! அவற்றில் சில...
இந்த சம்பவத்திற்கு பிறகு, நன்னாரே பாடலின் வியூக்களும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust