கொடைக்கானல் : குணா படத்தில் வரும் குகையை நாம் ஏன் பார்க்க முடியாது? Twitter
தமிழ்நாடு

கொடைக்கானல் : குணா படத்தில் வரும் குகையை நாம் ஏன் பார்க்க முடியாது?

எல்லோருக்கும் குணா குகையாக தான் தெரியும் ஆனால் அந்த குகையின் முந்தைய பெயர் 'டெவில்ஸ் கிச்சன்' அதாவது,'பேய்களின் சமையல் அறை' என அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இந்தப் பகுதி ஆழமான குகை என்பதால் இதற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

Priyadharshini R

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது.

2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குணா குகை, கூட்டம் கூட்டமாக பயணிகளை ஈர்க்கும் மர்மமான மற்றும் அதிசயிக்கத்தக்க பகுதியாக இருந்தது.

எல்லோருக்கும் குணா குகையாக தான் தெரியும் ஆனால் அந்த குகையின் முந்தைய பெயர் 'டெவில்ஸ் கிச்சன்' அதாவது,'பேய்களின் சமையல் அறை' என அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இந்தப் பகுதி ஆழமான குகை என்பதால் இதற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான திரு.பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தைக் கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது. இந்து புராணங்களின்படி, பாண்டவர்கள் குகைகளில் தங்கி உணவு சமைத்துள்ளனர் என்ற குறிப்பும் உள்ளது.

அவ்வளவாக பிரபலமடையாமல் இருந்த இந்த குகை, கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு தான் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

அதற்கு முக்கிய காரணம், 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா என்ற படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' என்ற பாடல் இந்த குகையில் தான் படமாக்கப்பட்டது.

ரம்யமான இரவு சூழலில் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது. குணா படத்தின் மூலம் பிரபலமானதால் 'குணா' என்ற பெயரே அந்த குகைக்கு பொருத்தமாகிவிட்டது

இதற்கு பின்பு இந்த குகையை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

குணா குகையை சுற்றி பார்க்கும் ஆர்வத்தில் ஆபத்தை உணராமல் குகை பள்ளத்தில் தவறி விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர்.

வனத்துறையினரின் ஆலோசனையை ஏற்க மறுத்து குகைக்குள் சென்ற பலர் உயிரிழந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு குணா குகை மூடப்பட்டது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று வனத்துறையால் மரப்பாலம் அமைக்கப்பட்டது.

அதன் மூலம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குகையின் முகப்பு வரை சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பு வசதிகளுடன் குணா குகையை கண்டு ரசித்து வந்தனர்.

நாளடைவில் இந்த மரப்பாலமும் சிதிலமடைந்து விட்டதால் குணா குகைக்கு அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குகையை துரத்தில் இருந்த பார்த்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?