கொல்லிமலை: ஆகாயகங்கை முதல் சித்தர் குகைகள் வரை - த்ரில் பயணம் செல்ல தயாரா?  vikatan
தமிழ்நாடு

கொல்லிமலை: ஆகாயகங்கை முதல் சித்தர் குகைகள் வரை - த்ரில் பயணம் செல்ல தயாரா?

Antony Ajay R

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்களுக்கும் தமிழகத்தின் பிறபகுதியிலிருப்பவர்களும் சென்று வருவதற்கு ஏற்ற வீகெண்ட் ஸ்பாட் கொல்லிமலை.

இயற்கையை குறிப்பாக மலைகளை விரும்புபவர்கள் நிச்சயம் என்ஜாய் செய்யக் கூடிய இடம் கொல்லிமலை. அடர்ந்த காடு, பழங்குடி கிராமங்கள், அருவிகள், மலைப்பயணம் என கொல்லிமலையில் அனுபவிக்க பல விஷயங்கள் இருக்கின்றன.

நாமக்கல் மாவட்ட நகர்புறத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொல்லிமலை. இது இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பகுதியாகும்.

கொல்லிமலைக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலே பஸ்களிலோ செல்லலாம். மலைப்பகுதியில் குளிர்ந்த காற்றுக்கும் மேகங்களுக்கு நடுவில் பயணித்து மலையில் ஏறலாம்.

நாமக்கல் வழியாக 72 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக த்ரிலான ரைடிங் அனுபவம் கிடைக்கும்.

கொல்லிமலையில் அறப்பள்ளீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.

கொல்லிமலை சங்கப் பாடல்களில் இடம் பெற்றிருக்கிறது. இங்குள்ள குகைகளில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால் ஆன்மிக ரீதியாகவும் கொல்லிமலை முக்கியத்துவம் பெறுகிறது.

போகர் மற்றும் அகஸ்தியரின் குகைகள் ஆகாய கங்கை அருவிக்கு அருகிலும், கோரக்கா சித்தா மற்றும் காலாங்கிநாத சித்த குகைகள் வனப்பகுதிக்குள் ஆழமாக அமைந்துள்ளன. ட்ரெக்கிங்கை விரும்புபவர்களுக்கு இது ஏற்ற இடமாக இருக்கும். த்ரில்லான மலைப்பாதைகள் இருக்கும்.

கொல்லிமலையில் மற்றொரு முக்கியமான இடம் ஆகாய கங்கை அருவி. 140 அடி உயரத்தில் இருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

தண்ணீர் விழும் அழுத்தம் அதிகமாக இருப்பதனால் குழந்தைகள் இங்கு குளிப்பது ஆபத்தானதாக இருக்கும். மாசிலா அருவியில் குடும்பத்துடன் குளிக்க முடியும்.

மிளகுக் காரப் பணியாரம், மூங்கில் அரிசி இட்லி, மூலிகை சூப் என்று மூலிகை விருந்தே சாப்பிடலாம். மூலிகை தடவி மசாஜ் செய்து விட மசாஜ் செண்டர்கள் எல்லாம் இங்கு இருக்கும். ஃப்ரெஷ்ஷாக ஃபீல் பண்ணலாம்.

கொல்லிமலையில் பார்க்க வேண்டிய இடங்கள் :

ஆகாச கங்கை அருவி

அறப்பளீஸ்வரர் ஆலயம்

மாசிலா அருவி

நம்ம அருவி

படகுச் சவாரி

மாசி பெரியசாமி கோயில் ட்ரெக்கிங்

தாவரவியல் பூங்கா

சீக்குப்பாறை வியூ பாயின்ட்

சித்தர் குகைகள்

எட்டுக்கை அம்மன் கோவில்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?