மதன் கெளரி திருமணம் : கலந்து கொண்ட நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

 

NewsSense

தமிழ்நாடு

மதன் கெளரி திருமணம் : கலந்து கொண்ட நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் | Pics

NewsSense Editorial Team

2K கிட்ஸின் encyclopedia மதன் கெளரி, தனது நெடுநாள் காதலையை கரம் பிடித்தார்.


யூ-ட்யூபர்களின் தனிக்காட்டு ராஜா


தமிழ்நாட்டில் ஏராளமான யூட்யூப் சேனல்கள் இருக்கின்றன. இருந்தாலும் சில சேனல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன. அப்படியான ஒரு சேனலை நடத்தி வருபவர் மதன் கௌரி.

இதில் அவர் Explainer வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

மதன் கெளரியின் இந்த youtube சேனல் அவர் காதல் தோல்வியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது. இப்போது இந்த காதல் சுபத்தில் முடிந்திருக்கிறது.

சேனல் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ அதே அளவு விமர்சனங்களும் இருக்கிறது. Conspiracyகளை ஊக்குவிக்கும் சேனல், UnChecked செய்திகளை சுவாரஸ்யத்திற்காக பகிரும் சேனல் என பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

கடந்த மாதம் ஜனவரி 11 ஆம் தேதி மதன் கௌரி தனது திருமண செய்தியை தன் யூட்யூப் சேனலிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார்.

மதன் கெளர் - நித்யா

பதற்றமாக உள்ளது

அந்த பதிவில், “சமூக வலைத்தளங்களில் பழகி காதலர்களாகிப் பிரிந்துவிட்டு மீண்டும் சேர்ந்திருக்கிறோம். இது தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. இந்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்” என்று பதிவிட்டு இருந்தார்.

மதன் கெளரி காதல் கதை

சமூக வலைதளம் மூலம் பழகி காதலர்களாக ஆகி உள்ளனர் மதன் கெளரியும், நித்யாவும்.

இது தொடர்பாக மதன் கெளரி, “ மதுரையில் நான் படிக்கும்போது நித்யா என்ற பெண் குறித்து என் நண்பர்கள் கூறுவார்கள். அதனையடுத்து சமூக வலைதளத்தில் பழக்கமானோம்.” என்று கூறி உள்ளார்.

பின்னர் ஒரு கமாவாக, இவர்கள் காதல் Breakup ஆகி இருக்கிறது.

அந்த சமயத்தில் தான் மதன் தன் IT பணியை உதறிவிட்டு Youtube Channel-ஐ தொடங்கி இருக்கிறார்.

மீண்டும் காதல்

பின்னர் மீண்டும் நித்யாவை சந்தித்து தான் இன்னும் அதே காதலுடன்தான் இருப்பதாக கூறி இருக்கிறார். அதில் உருகி போன நித்யா மதனின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த காதல் இப்படியாக மீண்டும் மலர்ந்திருக்கிறது.

திருமணம்

நேற்று நடைபெற்ற மதன் கெளரியின் திருமணத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வெதர்மேன் பிரதீப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?