மதன் கௌரி Twitter
தமிழ்நாடு

மதன் கெளரி : 90'ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம் ஆனது எப்படி? யார் இவர்? - முழுமையான வரலாறு

சுவாரஸ்யமான குற்றச் சம்பவங்களை மையமாகக் கொண்டு அவர் வழங்கும் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களைக் குவிக்கும். சினிமா பாடல்களுக்கு டஃப் கொடுத்து ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும் மதன் கௌரியின் வீடியோக்கள்.

Antony Ajay R

2k கிட்ஸின் உலகிலிருந்து வரும் புதிய செய்திகள் நாளுக்கு நாள் திடுக்கிட வைக்கின்றன. யாருயா நீங்கல்லாம்? எங்க இருந்துயா வர்றீங்க? என உலகமே இணையத்தின் வழி அவர்களைப் பார்த்துக் குழம்புகிறது.

அமலா சாஜி, டிடிஎஃப் என அவர்களின் ரசனைக்குரியவர்கள் வித்தியாசமானவர்களாக இருக்கின்றனர்.

கிரிஞ்ச், பூமர், மாஸ் என அவர்களின் வகைப்பாட்டுக்குள் அடங்கும் அனைவருக்கும், இணையத்தில் ஒரு தனித்துவமான இடம் கிடைத்துவிடுகிறது. அப்படி தனக்கென இணையத்தில் தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டவர் தான் மதன் கௌரி.

90’ஸ்களுக்கும் மதன் கௌரியை பிடிக்கும். உலகில் நடந்த, நடக்கிற, நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றிய தகவல்களைத் தனது பேச்சாற்றலால் சுவாரஸ்யமாக முன்வைப்பவர் மதன் கௌரி.

அதிலும் குறிப்பாக சுவாரஸ்யமான குற்றச் சம்பவங்களை மையமாகக் கொண்டு அவர் வழங்கும் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களைக் குவிக்கும். சினிமா பாடல்களுக்கு டஃப் கொடுத்து ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும் மதன் கௌரியின் வீடியோக்கள்.

மதன் கௌரிக்கு என்று தனி ஸ்டைல் இருப்பது போன்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. அதிலும் கல்லூரிப் பெண்களுக்கு அவர் என்றால் அவ்வளவு இஷ்டம்.

இணைய உலகின் மேடி என்றே அவரைச் சொல்லலாம்.

யார் இந்த மதன் கௌரி? எங்கிருந்து தொடங்கியது அவரது பயணம்? இத்தனை லட்சம் இளையஞர்களை அவர் வீடியோக்கள் ஈர்த்தது எப்படி? வாருங்கள் காணலாம்.

மதன் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தூத்துக்குடி தான் அவரது சொந்த ஊர். சிறுவயதிலேயே மதுரைக்குச் சென்றவர், பின்பு அங்கு தான் பள்ளிப் படிப்பை முடித்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம். கோயமுத்தூரில் எம்.பி.ஏ, நியூயார்க் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் வணிகம் மற்றும் அனலிடிக்ஸில் எம்.எஸ் ஆகிய பட்டங்களை வாங்கியிருக்கிறார் மதன் கௌரி.

சமூகத்தின் தரப்புக்கு இணையம் வந்து சேருவதற்கு முன்னரே, அதாவது ஜியோவுக்கு முன்பே யூடியூப் சேனலைத் தொடங்கினார் மதன். 2013ம் ஆண்டு அவரது சேனல் தொடங்கப்பட்டது.

விட்டுச் சென்ற தனது காதலிக்காக எடுத்த வீடியோ, ஹிட்டடிக்க அங்கிருந்து தான் யூடியூப் சேனலுக்கான விதை போடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் மதன் கௌரியின் இந்த வெற்றிக்கு பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதுப் குறிப்பிடத்தக்கது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக்கொண்டிருந்த போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் இருந்து பட்டிமன்றம் போன்ற ஒரு நிகழ்ச்சிக்காக ஆடிஷன் நடந்தது.

அந்த ஆடிஷனில் கலந்து கொண்டு டீவியில் பேச வேண்டும். அந்த அறிமுகத்தை வைத்து எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்பது தான் அப்போது அவரது கனவாக இருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆடிஷனில் அவர் வெற்றியடையவில்லை. அதன் பிறகு கல்லூரி ஆசிரியர்கள், மனமுடைந்த மதன் கௌரியைப் பார்த்து அவரை ஷூட்டிங்குக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருக்கின்றனர். தோற்றுப் போன ஒருவனாகவே அந்த தனியார் தொலைக்காட்சியின் அரங்க்குக்குள் நுழைந்தார் மதன்.

பேச வாய்ப்பு கிடைக்கவில்லை எனினும் முகத்தையாவது கேமராவுக்குள் கொண்டுவரலாம் என்ற அவரது நினைப்பும் பாழானது. மிகுந்த வருத்தத்துடன் அங்கிருந்து வெளியேறினார் மதன் கௌரி.

அதன் பிறகு பட்ட மேற்படிப்பு, அமெரிக்காவில் சென்று படித்தது, வேலைக்குச் சென்றது என அவர் வாழ்க்கை நகர்ந்தது. ஆனாலும் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்கிற கனவு அதே இடத்தில் காத்திருந்தது. சரியான நேரம் வருவதற்காக...

2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட அவரது வீடியோக்கள் புத்துயிர் பெற்றது. வீடியோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற இன்று இவரது நிலையை இந்த ஒரு வீடியோ மூலம் நாம் புரிந்துகொள்ள முடியும்.


மதன் கௌரி குறித்து Google -ல் அதிகம் தேடப்படும் கேள்விகளும் அதற்கான விடைகளும்!

Madan Gowri Age

1993ம் ஆண்டு பிறந்த மதன் கௌரி ஒரு அக்மார்க் 90’ஸ் கிட். இப்போது அவருக்கு 29 வயது.


Madan Gowri net worth

லட்சக் கணக்கில் வருமானம் பெறும் தமிழ் யூடியூபர்ஸ் லிஸ்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே இடம் பிடித்தவர் மதன் கௌரி. இவரது சொத்து மதிப்பு குறித்து பல புரளிகள் கிளம்பியிருக்கின்றனர். யூடியூபர் மதன் கௌரி salary என்றே யூடியூபில் பல வீடியோக்கள் இருக்கின்றன.

Madan Gowri Twitter

அவரது டிவிட்டர் கணக்குக்குள் நுழைய இங்கு கிளக் செய்யவும்.

Madan Gowri wife

மதன் கௌரி - நித்ய கல்யாணி இருவரும் கடந்த 11.02.2022 அன்று திருமணம் செய்து கொண்டனர். இது ஒரு காதல் திருமணம்.

புகழ் பெறும் ஒருவர் விமர்சனத்திலிருந்து தப்புவது முடியாத காரியம். அப்படி மதன் கௌரிக்கும் பல விமர்சனங்கள் வருவதுண்டு. அது தவிர, கிண்டல் செய்யும் நபர்கள் பலரையும் அவர் கடந்து வந்திருக்கிறார்.

மதன் கௌரியின் பேச்சு 'தனக்கு தான் எல்லாம் தெரியும்' போன்ற தொனியில் இருக்கிறது என்பது தான் பொதுவாக அவரை விமர்சிப்பவர்கள் கூறுவது. ஆனால் அந்த தொனி தான் அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறது. அவர் ரசிகர்களுக்கும் அது பிடிக்கும்.

மற்றொரு விமர்சனம், சில தகவல்கள் முழுமையாக இல்லாமல் அல்லது தவறாக கொடுக்கப்படுவது. உதாரணமாக பேலியோ டயட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் இருக்காது என அவர் கூறியிருப்பார். உண்மையில் பேலியோ டயட்டில் சில பால் பொருட்களும் பட்டியலிடப்பட்டிருக்கும்.

இதனை மருத்துவர் ஃபரூக் அவரது வீடியோவில் கமென்ட்டாக போட்டிருப்பார். இணைய உலகத்தில் தவறுகள் நடந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டும் நபர்களும் அருகிலேயே இருப்பார்கள். இந்த யுகத்தின் சிறப்பே அது தானே!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?