Stalin Twitter
தமிழ்நாடு

முதலீடு செய்ய வாருங்கள், எல்லோரும் பயணடைவோம் - துபாயில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும்,சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளது. வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு. எல்லோரும் பயனடைவோம் என்று இந்த தருணத்தில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் - Stalin

Antony Ajay R

அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் துபாயிலிருந்து முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பேசினார். தமிழ் நாட்டின் வளங்கள் குறித்து இங்கு முதலீடு செய்வதால் துபாய்க்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசிய அவர், தூத்துக்குடி பர்னிச்சர் பார்க் உள்ளிட்ட திட்டங்களை விளக்கிக்கூறினார்.

"பறக்கும் கார் முதல் தானியங்கி ரயில் வரை உயர் தொழில்நுட்ப போக்குவரத்தில் சிறந்திருக்கிறது துபாய். சுமார் 17 மில்லியன் பயணிகள் ஆண்டுதோறும் துபாயின் அழகை ரசிக்க வருகின்றனர். நான் முதலமைச்சர் ஆனதுக்கு பிறகு செய்யும் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் துபாய்க்கு தான்" என உரையைத் தொடங்கிய ஸ்டாலின், "தமிழ்நாடு வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அமைந்த மாநிலம். கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலம். 2030 ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற தொலைநோக்குடன் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த லட்சிய இலக்கை அடைவதற்காகத் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் பணியாளர்களுடைய திறனை மேம்படுத்துதல், வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும்,சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளது. வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு. எல்லோரும் பயனடைவோம் என்று இந்த தருணத்தில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்" எனப் பேசினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?