வாவ சுரேஷ்

Twitter

தமிழ்நாடு

Moning News Wrap : வாவ சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம் - முக்கிய செய்திகள்

Antony Ajay R

வாவ சுரேஷ் : உடல் நிலையில் முன்னேற்றம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவசுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் கேரளாவில் மட்டும் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். சமீபத்தில் கோட்டயம் நகரில், ஒரு வீட்டுக்குள் புகுந்த ராஜ நாக பாம்பை பிடிக்க சுரேஷ் சென்றார். அப்போது அந்த பாம்பு அவருடைய வலது முழங்காலில் கடித்து விட்டது.

மயங்கி விழுந்த சுரேஷ் முதலுதவிக்குப் பின், கோட்டயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோட்டயம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயக்குமார், "சுரேசுக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை அகற்றி விட்டோம். ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றி விடுவோம். இதற்கு முன்பும் அவர் பல முறை பாம்பு கடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார்" எனக் கூறினார்

விஜயுடன் பில்லா ஜெகன்

திமுக-வை ஆதரிக்கும் விஜய் மக்கள் மன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் என தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார்.

திமுகவை ஆதரித்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இன்று முதல் பிரச்சாரம் செய்ய உள்ளோம். விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமைக்கு தெரிவித்துவிட்டே திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பில்லா ஜெகன் கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம்

பெரு : சுற்றுலா விமான விபத்து 7 பேர் பலி

பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர். விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.

வாவ சுரேஷ் : உடல் நிலையில் முன்னேற்றம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவசுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் கேரளாவில் மட்டும் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். சமீபத்தில் கோட்டயம் நகரில், ஒரு வீட்டுக்குள் புகுந்த ராஜ நாக பாம்பை பிடிக்க சுரேஷ் சென்றார். அப்போது அந்த பாம்பு அவருடைய வலது முழங்காலில் கடித்து விட்டது.

மயங்கி விழுந்த சுரேஷ் முதலுதவிக்குப் பின், கோட்டயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோட்டயம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயக்குமார், "சுரேசுக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை அகற்றி விட்டோம். ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றி விடுவோம். இதற்கு முன்பும் அவர் பல முறை பாம்பு கடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார்" எனக் கூறினார்

கோஸ்க்  அணிந்த பெண்

மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் - கோஸ்க்

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நம்முடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக முக கவசம் மாறியுள்ளது. அவ்வப்போது வித்தியாசமான முக கவசங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான முக கவசம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. முக கவசம் என்று சொல்வதை விட மூக்கு கவசம் என சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இந்த மூக்கு கவசத்தை தென்கொரியாவைச் சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த புதிய வகையான மூக்கு கவசத்திற்கு 'கோஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு என பொருள் தரும் 'கோ' என்ற கொரியன் சொல்லையும் மாஸ்க் என்ற ஆங்கில சொல்லையும் இணைத்து இந்த மூக்கு கவசத்திற்கு கோஸ்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிந்து கொண்டு பல சாதாரண செயல்களைச் செய்வதும் சிரமமான ஒன்றாக மாறி உள்ளது. குறிப்பாக சாப்பிடும் போது, அருந்தும்போது என முக கவசத்தைக் அடிக்கடி கழற்றி வைக்க நேரிடுகிறது. அடிக்கடி கழற்றி வைப்பதால் முக கவசத்தில் கிருமி பரவும் வாய்ப்பு கூட உள்ளது. எனவே தான் சாப்பிடும்போது மற்றும் அருந்தும்போது மூக்கை மட்டும் மூடிக்கொண்டு சாப்பிட வசதியாக இந்த மூக்கு கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தீவத்துடன் ஜாக்கி சான்

ஒலிம்பிக் தீபத்துடன் சீனப் பெருஞ்சுவரில் ஓடிய பிரபல நடிகர் ஜாக்கிசான்… வைரல் புகைப்படம்!

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டியை முன்னிட்டு அந்தப் போட்டிக்கான தீபத்தொடர் ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று தீபத்தைச் சுமந்து சீனப்பெருஞ்சுவரின் மீது ஓடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது உலக அளவில் வைரலாகி வருகின்றன.

இதில் 67 வயதான நடிகர் ஜாக்கிசானும் கலந்துகொண்டுள்ளார். நேற்று நடிகர் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக்கொண்டு சீனப் பெருஞ்சுவரின் மீது ஓடிவந்தார். முன்னதாக அந்நட்டின் கோடைக்கால அரண்மனையில் துவங்கிய இந்த தீபத்தொடர், சீனப்பெருஞ்சுவர் மற்றும் முக்கிய அடையாளச் சின்னங்களை கடந்து செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல இந்தத் தீபத்தொடர் ஓட்டம் அதிக தூரம் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

நேற்று சீனப் பெருஞ்சுவரில் தீபத்தை ஏந்திக் கொண்டு ஓடிய நடிகர் ஜாக்கிசான் இதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து ஆவலுடன் காத்திருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர் இதுவரை 4 முறை குளிர்கால ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக்கொண்டு ஓடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்று மிக்க விளையாட்டில் நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று இருப்பது இளம் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?