மொழிப்போர்

 

Twitter

தமிழ்நாடு

தாய் மொழி தினம் : வெறும் அனுசரிப்பல்ல, தேசிய இனங்களின் உரிமைக்குரல்

ஒரு மொழி என்பது அந்நிலத்தின் வெளிப்பாடு, மக்களின் சிந்தனையை நெறிப்படுத்தும் கருவி, பண்பாட்டின் ஊன்றுகோல். அப்படியான மொழி இறக்கும் போது

Antony Ajay R

இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. எவ்வித ஆர்ப்பரிப்பும், கொண்டாட்ட உணர்வும் இன்றி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களால் கடந்துவிடக் கூடிய தினம் தான் தாய்மொழி தினம்? என்றால், நிச்சயம் இல்லை. மொழி ரீதியான ஏற்றத் தாழ்வுகளை, அடக்கு முறைகளை எதிர்க்கும் நாம் தாய் மொழிப் பற்றை அவற்றுடன் ஒப்பிட்டுவிட முடியாது. பிறந்தது முதல் இறக்கும் வரை உங்கள் மொழி உங்களுடன் பயணிக்கும், எந்த நாட்டில் நீங்கள் குடியேறினாலும் ஆழ்மனத்தைத் தாய் மொழியே ஆக்கிரமித்திருக்கும். உங்கள் நிலத்தை உங்கள் மொழி பிரதிபலிக்கும், உங்கள் பண்பாட்டை அதுவே உருவாக்கும். உலகில் தற்போது 7000 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேலாக தற்போது அழிந்து வருகிறது. இந்தியாவின் பல மொழிகளின் கழுத்து நெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கியதில் அடையாளம் தெரியாமல் போன பழங்குடி மொழிகள் பல்லாயிரம்.

மரியே ஸ்மித் ஜோனெ

ஒரு மொழி மரணிக்கும் போது...

கடந்த 2018ம் ஆண்டு மார்சி 21ம் நாள் மரியே ஸ்மித் ஜோனெஸ் எனும் வயதான பாட்டி இறக்கும் போது கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் கண்ணீர் சிந்தினர். காரணம் ‘ஏய்க்’ எனும் பழங்குடி மொழியை அறிந்த ஒரே நபராக அந்த பாட்டிதான் இருந்தார். இப்போது அந்த மொழி இறந்து 4 ஆண்டுகள் நிறைவு பெறப் போகிறது. இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கும் அந்த மொழி திரும்பப்போவதில்லை என்பது துரதிருஷ்டவசமான உண்மை.

ஒரு மொழியை, அதன் மேன்மையைக் காக்கவேண்டியது அம்மொழியில் சிந்திப்பவர்களின் பிறவிக்கடன். தினம் தினம் நாம் பயன்படுத்தும் நம் மொழிக்கு நன்றியுடன் இல்லாமல் வாழ்வில் வேரென்ன சாதிக்கப் போகிறோம்.

ஆட்சி மொழி

தாய் மொழியில் ஆளப்படுவது ஒவ்வொரு மக்களின் உரிமை, மக்களாட்சியில் மக்களே தங்களை ஆண்டு கொள்ளும் உணர்வை தாய் மொழியில் செய்யாத போது பெற முடியாது.

கிழக்கு பாகிஸ்தானாக வங்காள தேசம் இருந்த காலக்கட்டத்தில், இரு நாடுகளிளும் ஒரே மதம் தான் நிலவியது. ஆயினும் பாகிஸ்தானியர்கள் உருது மொழியை மேன்மையானதகவும் வங்காள மொழியை மேன்மையற்றது எனக் கருதியதும் அங்கு மொழிபோர் உருவாக காரணமாக இருந்தது. மொழிகளின் ஆளுமை மதம் இனம் போன்றவற்றால் கட்டுப்படுத்தக் கூடியதன்று என்பதை அந்த சம்பவங்கள் உரைக்கின்றன.

உருது மொழி தங்கள் மேல் திணிக்கப்படுவதை வங்காள மக்கள் வெறுத்தனர். கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. அதில் மாணவர்கள் அரசியல் தலைவர்கள் ஆகியோர் பங்கு பெற்று போராட்டங்களை மேற்கொண்டனர். காவல்துறை நடவடிக்கையால் 4 உயிர்கள் பலியாகின. 1956-ம் ஆண்டு வங்க மொழி கிழக்கு பாகிஸ்தான் மொழியாக அறிவிக்கப்பட்டது.

தாய் மொழி தினம்

இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கம் தனி நாடக பிரிந்ததற்கு மொழியே முக்கியப் பிரச்சனையாக இருந்தது

மொழிப் போர் தியாகிகள் நினைவு மண்டபம்

தமிழ்நாட்டில் மொழிப் போர்

வங்க தேசத்தைப் போலத் தமிழ் நாட்டிலும் மொழிப் போர்கள் நடைபெற்றுள்ளன. 1939 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவிலான மொழிப் பிரச்சனைகளை எதிர்கொண்டது தமிழ் நாடு. 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் வீரமரணம் அடைந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னும் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளத் தமிழ் மக்கள் போராடினர், 1965ல் 100க்கும் மேற்பட்டோர் மரணித்தனர்.

தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு தேசிய இனத்திடம் வேறொரு மொழியைத் திணிக்க முட்டுவது “செய் அல்லது செத்துமடி” என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க செய்வதைப்ச் போன்றது. ஒன்று அவ்வினம் வீறுகொண்டு எழும், அல்லது அம்மொழி குரல் வலை நெரிக்கப்பட்டுச் சாகும். அப்படி செத்த மொழிகளின் அதை உருவாக்கி வாழ்ந்த மக்களின் புதைந்துப் போன பண்பாட்டின் ஓலம் இப்போதும் காற்றில் இருக்கத்தான் செய்யும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?