இந்தோனேசியாவுக்கு Honey moon சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த புதுமண தம்பதி பலி - என்ன நடந்தது? Twitter
தமிழ்நாடு

இந்தோனேசியாவுக்கு Honey moon சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த புதுமண தம்பதி பலி - என்ன நடந்தது?

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரது சடலங்களை இந்தியாவுக்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Priyadharshini R

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் பூவிருந்த வல்லியை சேர்ந்த விபூஷ்னிக்கும் கடந்த ஜூன் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து தேனிலவுக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர்.

பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் இருவரும் சென்றபோது போட்டோஷூட் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவரும் நீரில் மூழ்கினர்.

அவர்களை மீட்கும் முயற்சியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் - விபூஷ்னி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவரது சடலங்களை இந்தியாவுக்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய இவர்கள் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் குடும்பத்தினர், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?