"மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்" - இறுதி அஞ்சலியில் ரஜினிகாந்த் பேசியது என்ன? Twitter
தமிழ்நாடு

"மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்" - இறுதி அஞ்சலியில் ரஜினிகாந்த் பேசியது என்ன?

நாங்கள் சந்திக்கும் போது எம்.ஜி.ஆர் அல்லது சிவன் பற்றி மட்டுமே பேசுவார். கடந்த முறை அவர் தொடர்பு கொண்ட போது என்னால் பேச இயலவில்லை - ரஜினிகாந்த்

Antony Ajay R

நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம் பலருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சனிக்கிழமை இரவு சிவராத்திரி விழாவில் பங்கெடுத்துவிட்டு ஞாயிறு அதிகாலையில் திரும்பியவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

57 வயதான மயில்சாமியின் குடும்பத்தில் மனைவி கீதா மற்றும் அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது நாளாக அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தும் இன்று மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், சிவ பக்தர். நாங்கள் சந்திக்கும் போது எம்.ஜி.ஆர் அல்லது சிவன் பற்றி மட்டுமே பேசுவார். கடந்த முறை அவர் தொடர்பு கொண்ட போது என்னால் பேச இயலவில்லை.

தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவன் அழைத்துச் சென்றுவிட்டார். ஒவ்வொரு முறை கார்த்திகை தீபத்தின் போதும் திருவண்ணாமலையில் இருந்து எனக்கு ஃபோன் செய்வார். மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. அது சிவனின் கணக்கு. கேளம்பாக்கத்தில் நான் பாலபிஷேகம் செய்யும் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன். விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு சமூகத்துக்கு பேரிழப்பு என்றார் ரஜினிகாந்த்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?