தொல் தமிழர் வாழ்வில் பன்றிகள் NS
தமிழ்நாடு

தொல் தமிழர் வாழ்வில் பன்றிகள் - மாமன்னன்களாக வாழ்ந்த தமிழர்கள்!

NewsSense Editorial Team

உலகத்திலேயே திணைக் கோட்பாட்டை வகுத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணை பிரித்து வாழ்ந்த   ஆதிதமிழர் மரபில்  எந்த விலங்குகள் குறித்தும் அசூயை இல்லை. 

பன்றிகளும் தமிழர் வாழ்வில் ஒரு அங்கம்தான் என்பதற்கு சான்றாக இருக்கிறது சங்க இலக்கியங்கள்.

அதற்கான உதாரணங்கள் இங்கே,

பறழ்ப் பன்றி, பல் கோழி, 

உறைக் கிணற்றுப் புறச்சேரி,

ஏழகத் தகரொடு சிவல் விளையாட 

சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை

இதன் பொருள்

உறைகிணற்றை உடைய குடியிருப்பில், குட்டிகளையுடைய பன்றிகளும், பல வகையான கோழிகளும், ஆட்டின் கிடாய்களும் கவுதாரிகளும் விளையாடுகின்றன.

ஆட்டு கிடாய் உயர்வானது, பன்றிகள் தாழ்வானது என்ற சிந்தனை மரபே தமிழர்களிடம் இல்லை என்பதற்கான சான்று இப்பாடல்.

அடுத்து, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம்-ல்  நன்னன் வேண்மான் பெருவள்ளலை பாடுகிறார்  இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

பாடல் 

தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்

சிறு கண் பன்றி பழுதுளி போக்கி

பொருது தொலை யானை கோடு சீர் ஆக

தூவொடு மலிந்த காய கானவர்

கானவர் சிறுகுடியில் தேனும் கிழங்கும் பெறலாம். ஆங்காங்கே கானவர் வாழும் வளம் மிக்க சிறுகுடிகள் இருந்தன. அங்குள்ள கானவர் யானைத் தந்தத்தில் இருபுறமும் உறி கட்டி உணவுப்பண்ட வட்டில்களை (வட்டில் = கூடை) தம் இருப்பிடங்களுக்குச் சுமந்து சென்றனர். தேன், கிழங்கு, புலால் முதலானவை அவர்கள் சுமந்துசென்ற உணவுப் பொருள்கள். காட்டுப் பன்றிக் கறியும் அதில் இருந்தது. அந்த உணவுப் பொருள்களை அங்குச் சென்றவர் தம் சுற்றத்துடன் சேர்ந்து உண்ணும் அளவுக்கு அவர்கள் விருந்தாகப் படைப்பர்.

பத்துப்பாட்டில் வரும் மற்றொரு பாடல்

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி

வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்

உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்

கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை

மழை கண்டு அன்ன ஆலைதொறும் ஞெரேரென . . . .[340]

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்

தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்

பன்றிப்பறையும் குன்றகம் சிலம்பும் 

இதன் பொருள்:

பிணையல் ஓட்டும் ஓசை - உண்டதுபோக மீதமுள்ள பலாச்சுளைகளில் உள்ள கொட்டைகளை எடுப்பதற்காகக் கன்றுகளைப் பிணையலாகக் கட்டி, அக் கன்றுகளைப் பூத்திருக்கும் காந்தள் கொடிகளால் மெதுவாக அடித்து ஓட்டும்போது சிறுவர்கள் எழுப்பும் ஆரவார ஓசை. கரும்பாலை ஓசை - மழைபோல் கரும்புச்சாறு ஓடும்படிகரும்பாலையில் கரும்பின் கண்ணை உடைக்கும் ஆலை ஓசை. வள்ளைப் பாட்டு - மகளிர் பாடிக்கொண்டு தினை குற்றும் வளையல் தாளப் பாட்டோசை. பன்றிப் பறை - நிலத்தைக் கிண்டி சேம்பினையும், மஞ்சளையும் வீணாக்கும் பன்றியை ஓட்ட அந் நிலம் காப்போர் அடிக்கும் பன்றிப் பறையின் ஓசை. குன்றகச் சிலம்பு - இந்த எல்லா ஓசைகளையும் எதிரொலிக்கும் மலைக்காட்டின் எதிரொலி முழக்கம். இப்படிப் பல கடாம் ஓசைகளைக் கேட்கலாம்.

நற்றிணையில் அம்மூவனார் பாடுகிறார்,

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்

சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,

வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,

இதன் பொருள்,

சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியின்கண்ணே; முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்;

கூடலூர் கிழார் எழுதிய  ஐங்குறு நூற்றில் 

குருளைப் பன்றி கொள்ளாது கழியும்

சுரம்நனி வாரா நின்றனள்’ என்பது

முன்னுற விரைந்த நீர் உரைமின்;

இன்நகை முறுவல்என் ஆயத் தோர்க்கே.

இதன் பொருள் 

காதலனோடு உடன் போக்கு  செல்லும்  போது காட்டு வழியில்

செந்நாய் ஒன்றை பார்க்கிறாள் கூடவே ஒரு தாய்பன்றியோடு பன்றி குருளையும் ( பன்றி குட்டிக்கு தூய தமிழ் பெயர் குருளை) இருந்தும் அந்த செந்நாய் அந்த தாய் பன்றியையோ அதன் குட்டியையோ ஒன்றும் செய்யாமல் போகிறது ....

இன்னும் அகநானூறு, புறநானூறு, நற்றினை, அங்குறுநூறு என பல இடங்களில் பன்றி குறித்து பாடப்பட்டுள்ளது.

தமிழரின் தில் மரபில் எந்த விலங்குகள் குறித்தும் வேற்றுமை இல்லை. ஆனால்,  இப்போதும் அதே நிலை தொடர்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.  

பாடப்பட்ட பாடல் அனைத்தும் காட்டுப் பன்றிகள் குறித்துதானே என வினவலாம்? ஆம், சங்க காலத்தில் வளர்ப்பு பன்றிகள் என தனித்து இல்லை. காட்டு பன்றிகளே பெரும்பாலும் சங்க இலக்கியத்தில் சுட்டப்பட்டுகிறது. அவை வீட்டு கொல்லையில் மற்ற விலங்கோடு விலங்காக விளையாடியதாக சங்க இலக்கிய பாடல்களில் பாடப்பட்டுள்ளது.

பிற்காலத்தில்தான் காட்டு பன்றிகள் வீட்டு பன்றிகளாக பயிற்றுவிக்கப்படுகிறது.

வடக்கு மெசபோட்டோமியாவில் கி.மு 6000-ம் ஆண்டுகளிலேயே பன்றிகள் வளர்ப்பு விலங்காக இருந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?