சென்னை எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரமாக இருந்தாலும், பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இங்கு ஏராளம் இருக்கின்றன.
அதனாலே சென்னைக்கு எப்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் பலருக்கும் தெரியாத சில அமானுஷ்யமான இடங்களும் சென்னையில் இருக்கிறது குறித்து தெரியுமா?
இப்போதும் கூட அந்த இடங்களுக்கு தனியாக செல்ல மக்கள் பயந்து நடுங்குவார்கள். சாகசத்தை விரும்புவோர்கள் இந்த இடங்களை சென்று பார்த்து த்ரில்லரான அனுபவத்தை பெறுகின்றனர். அப்படிப்பட்ட சில இடங்கள் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம்.
1967இல் கட்டப்பட்ட இந்த பாலத்தை பல வருடங்கள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த கடல் கொந்தளிப்பால் அந்தப் பாலம் இடிந்து விழுந்தது.
அதன் பிறகு அந்த இடத்தில் மர்மங்கள் சூழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் இரவில் அளவு அதிகமாக சத்தம் கேட்பதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
அதனால் அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் யாரும் செல்லமாட்டார்கள்.
இந்த இடம் மிகவும் பிரபலமடைய திரைப்படம் ஒரு முக்கிய காரணம். மக்கள் வசிக்கும் அபிராமிபுரம் நகருக்கு அருகில் தான் இந்த டிமான்டி காலனி இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன் டிமான்டி என்பவர் இங்கு தன் மனநலம் சரியில்லாத மனைவியுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவருடைய குழந்தை மர்மமாக இறந்து விட்டதாகவும் அதன் பிறகு அந்த இடத்தில் பல மர்மங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மக்கள் அந்த காலனி பக்கமே போவதில்லை.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை ஒரு மீனவ கிராமத்தையே முற்றிலும் அழித்துவிட்டது.
அந்த சம்பவத்தால் பலர் உயிழந்தனர், மக்கள் வீடுகளை இழந்தனர்.
அதில் ஒரு பகுதி தான் இந்த கரிக்காட்டு குப்பம். அந்த சம்பவத்திற்கு பிறகு இறந்து போனவர்கள் ஆவியாக அந்த இடத்தை சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அந்த இடத்தையே தற்போது திகிலுடன் பார்த்து வருகின்றனர்.
ப்ளூ கிராஸ் சாலையும் சென்னையில் பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படும் மற்றொரு இடமாகும். இந்த இடத்தில் பல தற்கொலைகள் நடந்ததாகவும் இதனால் இந்த இடத்தில் ஆவி நடமாடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடத்தில் அதிகமான மரங்கள் அடர்ந்த நிலையில் காணப்படுவதால் பார்ப்பதற்கே அமானுஷ்யமாக இருக்கும். இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே மனிதர்களைப் போன்ற வெள்ளை உருவங்கள் நடமாடுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். சிலர் இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தும் வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust