விமானத்தில் தமிழ் அறிவிப்புகள் - வைரல் விமானி ப்ரியவிக்னேஷின் கதை! Twitter
தமிழ்நாடு

விமானத்தில் தமிழ் அறிவிப்புகள் - வைரல் விமானி ப்ரியவிக்னேஷின் கதை!

தமிழகத்துக்கு உள்ளேயே ஓடும் விமானத்தில் கூட தமிழில் அறிவிப்புகளை மேற்கொள்ளாமல் இருப்பது பல நாட்கள் நமக்கு கேள்வியை எழுப்பியிருக்கும். தாய் மொழியில் விமான அறிவிப்புகளை கேட்கும் பலரது ஏக்கத்தை பூர்த்தி செய்தவர் தான் கேப்டன் ப்ரியவிக்னேஷ்.

Antony Ajay R

விமானி ஒருவர் சென்னை டூ மதுரை பறந்து கொண்டிருந்த விமானத்தில், "இன்னும் 10 நிமிடங்களில் உங்களுக்கு வலதுபுறமாக காவிரி ஆறு கொள்ளிடமாகவும் காவிரியாகவும் இரு வேறு ஆறுகளாக ஓடுவதைப் பார்க்கலாம். நடுவில் ஶ்ரீரங்கம் கோவில் இருப்பதையும் பார்க்க முடியும்" என்று அறிவித்த வீடியோ படுவைரலானது.

தமிழகத்துக்கு உள்ளேயே ஓடும் விமானத்தில் கூட தமிழில் அறிவிப்புகளை மேற்கொள்ளாமல் இருப்பது பல நாட்கள் நமக்கு கேள்வியை எழுப்பியிருக்கும். தாய் மொழியில் விமான அறிவிப்புகளை கேட்கும் பலரது ஏக்கத்தை பூர்த்தி செய்தவர் தான் கேப்டன் ப்ரியவிக்னேஷ்.

"நான் வடசென்னைக்காரன். ராயபுரத்தில் தான் பிறந்து, வளர்ந்தேன். என் ஆன்மாவில் ராயபுரத்தின் உப்புக் காற்று கலந்திருக்கிறது"
ப்ரியவிக்னேஷ்

யார் இந்த ப்ரியவிக்னேஷ்?

தேனியை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு வடசென்னை வாசி. சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகுந்த போராட்டங்களைக் கடந்து விமானியான சாதனையாளர்.

"நான் வடசென்னைக்காரன். ராயபுரத்தில்தான் பிறந்து, வளர்ந்தேன். என் ஆன்மாவில் ராயபுரத்தின் உப்புக் காற்று கலந்திருக்கிறது" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

வரலாறு படிப்பதில் ஆர்வமாக இருந்த விக்னேஷுக்கு விமானி ஆக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது. அந்த கனவு அவரது தகுதிக்கு அதிகமான விலையைக் கேட்டது.

அப்பா அம்மாவின் அர்பணிப்பு தான் என்னை விமானியாக்கியிருக்கிறது.
ப்ரியவிக்னேஷ்

ஒரே கனா!

ஒரு சாதாரண வீட்டில் பிறந்த விக்னேஷின் மனதில் 'இது நம் தகுதிக்கு மீறியதோ' என்ற சந்தேகம் சிறிதும் எழாத வயதிலேயே கனவு குடிபுகுந்துவிட்டது.

விக்னேஷின் அப்பா ஒரு பாதையோர வியாபாரி. அம்மா தமிழாசிரியர். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த பிள்ளை வானில் உயரப்பறக்க நினைத்தது. அதுவே அந்த குடும்பத்தின் லட்சியமும் ஆனது.

"அப்பா அம்மாவின் அர்பணிப்பு தான் என்னை விமானியாக்கியிருக்கிறது" என தனது பேட்டியில் கூறுகிறார் விக்னேஷ்.

விக்னேஷ் விமானியாவதற்கு மிகப் பெரிய தடையாக இருந்தது பொருளாதார சூழல் தான்.

"விமானியாகப் பயிற்சி பெற பெரும் தொகை தேவைப்பட்டது. என் அம்மாவின் பி.எஃப் பணம் போதவில்லை. என் அப்பா அவரது பல்லாண்டு உழைப்பின் பலனாக வாங்கிய நிலத்தை அடகு வைக்க முயன்றார். அது கைகூடவில்லை. எனது விருப்பத்தை அங்கீகரித்த அத்தை தனது சொந்த வீட்டை அடமானம் வைத்து பணம் தந்தார். இதுவும் எனது முதல் இரண்டு கட்ட பயிற்சிக்கு மட்டும்தான் போதுமானதாக இருந்தது." என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

"என் அப்பா கடை வைத்திருக்கும் திருவனந்தபுரத்தில், நாகர்கோயிலை சேர்ந்த முருகன் என்பவர் ஒரு உணவகம் நடத்துகிறார். எனது நிலையைக் கேள்விப்பட்ட அவர் 15 லட்சம் பணம் கொடுத்தார். இப்படித்தான் என் கனவு வடிவம் பெற்றது," என்று பழைய நாட்களை நினைவு கூறுகிறார் விக்னேஷ்.

தமிழில் அறிவிப்பு

விமானியாக வேண்டும் என்பதைப் போலவே விமானத்தில் தமிழில் அறிவிப்புகளை கூற வேண்டும் என்பதும் விக்னேஷின் கனவாக இருந்திருக்கிறது.

அவர் உடன் இருந்த சஞ்சீவ் என்ற வட இந்திய விமானியும் தமிழில் அறிவிப்புகளை வெளியிட ஊக்கப்படுத்தியுள்ளார். இண்டிகோ நிறுவனமும் ஒத்துழைப்புத் தர, தமிழில் அறிவிப்புளை வெளியிட்டு பிரபலமடைந்தார் விக்னேஷ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?