Gayathri Raguraam - Annamalai Twitter
தமிழ்நாடு

காயத்ரி ரகுராம்: ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!

சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடைந்திராத நிலையில், தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

Keerthanaa R

கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். மேலும் அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அதிரடிக் குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார்.

பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக பதவி வகித்து வந்தார் காயத்ரி ரகுராம்.

இவருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நேரடியாகவே மோதல்கள் இருந்தன. கட்சியின் மீதும் தொடர்ந்து குற்றசாட்டுகளை வைத்துவந்தார் நடிகை.

அதே கட்சியை சேர்ந்த திருச்சி சிவா தொலைப்பேசியில், மற்றொரு பாஜக பெண் நிர்வாகியிடம் தகாத முறையில் பேசிய விஷயத்துக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார் காயத்ரி.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் கடந்த டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதக் காலத்திற்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடைந்திராத நிலையில், தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்த காயத்ரி, கட்சியின் மீதும், தலைவர் அண்ணாமலை மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

”பெண்களுக்கு பாதுகாப்பு, மரியாதை, சம உரிமை வழங்கப்படாத தமிழக பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என தன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

மேலும், தான் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்ததற்கு காரணம் அண்ணாமலை தான் எனவும், அவர் ஒரு பொய்யர், அதர்ம தலைவர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

“பெண்களே உங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். பத்திரமாக இருங்கள். உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் எப்போதும் இருக்காதீர்கள்” எனக் கூறியவர், தன்னிடம் இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோக்களை காவல் துறையினரிடம் சமர்பித்து புகாரளிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வார் ரூம் தன்னை தகாத முறையில் விமர்சித்ததாகவும், அண்ணாமலை தான் இதற்கும் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?