MK Stalin

 

Twitter

தமிழ்நாடு

Morning News Today: ECR இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

NewsSense Editorial Team

ஈ.சி.ஆர் இனிமேல் முத்தமிழறிஞர் கலைஞர் சாலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவள விழா, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைப்பெற்றது. விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், பவளவிழா நினைவுத் தூணைத் திறந்துவைத்து, பவளவிழா மலரையும் வெளியிட்டார். பிறகு, முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2,406.30 கோடி மதிப்பீட்டிலான 32 சாலைப் பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின்," அழகான, தரமான, சரியான சாலைகள் அமைத்தாலே போதும். அனைத்து மக்களிடத்திலும் முழுமையான நல்ல பெயரை நாம் வாங்கிவிடமுடியும். ரோடு சரியில்லை என்றால் மக்கள் முதலில் திட்டுவது அரசைத்தான். நெடுஞ்சாலைத்துறை சாதனைகள், பெருமைகளுக்குக் கருணாநிதிதான் காரணம். அதை மனதில் வைத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலை (ஈ.சி.ஆர்.) இனி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர் சூட்டப்படும்" என்றார்.

அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரு பயணம்! - கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப்படுமா?

கர்நாடகாவில், 2023-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜராட்டி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காகக் கர்நாடகாவில் கட்சியைப் பலப்படுத்தவும், தேர்தல் வியூகங்களை வகுக்கவும், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் கர்நாடகா சென்று ஆலோசித்து வருகின்றனர். இதையொட்டி இன்று பெங்களூர் செல்லும் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி, இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பம்

`வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க நடவடிக்கை!' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் சரும நோய்களால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வெப்பத்தின் தாக்கம் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில்," மிதமிஞ்சிய வெப்பத்துக்கு ஏற்ப ஆஸ்பத்திரிகள் வசதிகளைப் பெருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்கள் இயக்க தடையற்ற மின்சார விநியோகம், சோலார் தகடுகளை நிறுவுதல், உட்புற வெப்பநிலையைக் குறைக்கக் குளிரூட்டும் கூரைகள் போன்றவற்றை நிறுவ வேண்டும்.

மேலும், வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் சரும நோய்களைக் குணப்படுத்தத் தேவையான அத்தியாவசிய மருந்துகள், ஐ.வி. திரவம், ஓ.ஆர்.எஸ். கரைசல் தேவையான சாதனங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கிறதா என்று ஆய்வு செய்யவேண்டும். " எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம்!

கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பியப் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்குச் செல்கிறார். பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். மொத்தம் மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயணத்தில் 25 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மொத்தம் 65 மணி நேரம் இதற்காகச் செலவிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

imran khan

'ஆதாரம் கிடைத்தால் இம்ரான் கான் கைது செய்யப்படுவார்' - பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ எனக்கூறி கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீஸார் இம்ரான்கான், முன்னாள் மந்திரிகள் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இம்ரான்கானுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் எனப் பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்திருக்கிறார்.

தோனி

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?