"எங்க நிம்மதி போனதுதான் மிச்சம்" - ஆஸ்கர் தம்பதியை ஏமாற்றினாரா இயக்குநர் கார்த்திக்கி? Twitter
தமிழ்நாடு

"எங்க நிம்மதி போனதுதான் மிச்சம்" - ஆஸ்கர் தம்பதியை ஏமாற்றினாரா இயக்குநர் கார்த்திக்கி?

Antony Ajay R

கடந்த மார்ச் மாதம் நடந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் சிறந்த ஆவணப்படமாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருந்தது The Elephant Whisperers.

கார்த்திக்கி கொன்ஸாலவஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார். குனீத் மோங்கா என்பவர் இதன் முதன்மை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

தமிழகத்தில் முதுமலைப் பகுதியில் உள்ள யானைகள் காப்பகத்தில் பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றிய குறு ஆவணப்படம் தான் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்.

இந்த ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் மற்றும் பெள்ளி தாங்கள் இயக்குநர் காத்திக்கியால் ஏமாற்றப்பட்டது போல உணருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆஸ்கர் தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளிக்கு நடந்தது என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பொம்மன் பெள்ளி தம்பதியினர் பற்றி ஆவணப்படம் எடுத்த கார்த்திக்கி அவர்களுடன் மகள் போல உறவாடியுள்ளார். ஆவணப்படம் எடுக்கும் நேரத்தில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றால் அவர்கள் பேத்தியின் கல்விச் செலவு, வசிப்பதற்கான வீடு என பல உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

படமோ உலகின் உச்சானிக் கொம்பை அடைந்தது. கார்த்திக்கிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆனால், இந்த படம் உருவாவதற்கும் படத்தின் வெற்றிக்கும் முழுக்காரணமாக இருந்த பொம்மன் பெள்ளி தம்பதியின் நிம்மதி சீர்குலைந்தது தான் மிச்சமாக இருக்கிறது.

ஆஸ்கர் வென்ற பிறகு பொம்மன், பெள்ளி மீது அதிகப்படியான மீடியா வெளிச்சம்பட்டது. பிரதமர், குடியரசு தலைவர் எல்லாம் நேரில் சென்று பார்த்தனர்.

தமிழக அரசை தவிர வேறு எந்த இடத்திலிருந்தும் பொம்மன் மற்றும் பெள்ளிக்கு எவ்வித உதவியும் கிடைத்திருக்கவில்லை. அதேநேரம், இந்த விளம்பரத்தால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களை திடீர் பணக்காரர்காளாகிவிட்டவர்கள் போல நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பொம்மன் மற்றும் பெள்ளியின் நிம்மதி குலைந்துப்போயிருக்கிறது.

The Elephant Whisperers star becomes tourist attraction in Theppakadu Elephant Camp after Oscar win

காட்டு நாயக்கர் பழங்குடி தம்பதியை வைத்து படம் இயக்கிய கார்த்திக்கி இப்போது அவர்களது செல்போன் அழைப்புக்கு கூட பதிலளிப்பதில்லை.

மும்பைக்கு ஆஸ்கர் வெற்றி விழாவுக்கு சென்ற பொம்மன் பெள்ளிக்கு விமான நிலையத்தில் இருந்து திரும்ப பேருந்து கட்டணம் கூட கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளனர்.

உரிய மரியாதையுடன் அவர்களது போக்குவரத்தைக் கூட கவனிக்கத் தவறியுள்ளனர்.

ஆவணப்படத்தில் வரும் திருமணக்காட்சியை எடுப்பதற்காக கார்த்திக்கி பெள்ளியிடமே பணம் வாங்கியுள்ளார். பேத்தியின் கல்லூரி படிப்புக்காக வைத்திருந்த பணத்தில் 80,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார் பெள்ளி.

அந்த செலவுக்கான பணத்தைக் கூட கார்த்திக்கி திரும்ப கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுவாக ஆவணப்படங்களில் நாயகர்களுக்கு தொகை எதுவும் வழங்கப்படாது. ஆனால் அவர்களது நிலையைக் கருத்திக் கொண்டு உதவித் தொகையை கொடுக்கலாம்.

அவர்களுக்கு சத்தியம் செய்த உதவிகளை செய்யலாம். குறைந்தபட்சம் அவர்கள் செலவு செய்த தொகையாவது திருப்பிக் கொடுக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆவணப்படங்கள் திரைப்படங்களைப் போல அல்லாமல் நிகழும் நிகழ்வுகள் அப்படியே படம் பிடிக்கப்படுபவையாக இருக்கும். ஆனால் பொம்மன், பெள்ளி திருமணத்தை செயற்கையாக நடத்தி எடுத்துள்ளார் கார்த்திக்கி. அவர்களை நள்ளிரவில் கூட அழைத்து காட்டுக்குள் வைத்து படம் பிடித்துள்ளார்.

தங்களுடன் நெருங்கிப் பழகியதால் பொம்மன், பெள்ளியும் அவருக்கு நல்லமுறையில் ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். ஆனால் கார்த்திக்கி இப்போது அவர்கள் யாரோ தான் யாரோப் போல நடந்துகொண்டிருக்கிறாராம்.

பொம்மன், பெள்ளி சார்பில் யாராவது பேசினால், தான் சட்டரீதியாக என் வழக்கறிஞரை வைத்துப் பேசுவதாக கூறிவிடுகிறாரம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?