"FIFA உலகெங்கிலும்..." 50 GB டேட்டா இலவசமாக கிடைக்கிறதா? - உண்மை என்ன? டிவிட்டர்
தமிழ்நாடு

"FIFA உலகெங்கிலும்..." 50 GB டேட்டா இலவசமாக கிடைக்கிறதா? - உண்மை என்ன?

Antony Ajay R

ஃபிஃபா 2022 கால்பந்துக் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதுமே Football Fever ஏற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் தான் உயிர் என வாழும் இந்திய இளைஞர்கள் கூட கால்பந்து போட்டிகளை ரசித்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி மோசடி செய்ய ஒரு கும்பல் இறங்கியுள்ளது குறித்து காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

* FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.*

* நான் என்னுடையதைப் பெற்றேன்.*

* இதைத் திறக்கவும்*

என ஒரு லின்குடன் குறுஞ்செய்திகள் பகிரப்படுகின்றன. இதனை நம்பி க்ளிக் செய்பவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறிபோவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது போன்ற ஒரு லின்கை 50 ஜிபி இலவசமாக கிடைக்கும் என நம்பி க்ளிக் செய்ததாகவும் இதனால் ஒருவரின் அக்கவுன்டில் இருந்து 4,300 ரூபாய் பறி போனதாகவும் ஒரு மெஸ்ஸேஜ் வைரலானது.

இந்த மெஸ்ஸேஜ் வைரலானதையடுத்து இதனை யாரும் பகிர வேண்டாம் எனக் கூறிவந்தனர். ஆனால் 50 ஜிபி டேட்டாவுக்கு ஆசைப்படும் மக்கள் தொடர்ந்து பகிர்ந்தபடியே இருக்கின்றனர்.

இந்த குறுஞ்செய்திகளை நம்பாமல் இருக்குமாறு தமிழக காவல்துறை ட்விட்டரில் வலியுறுத்தியிருக்கின்றனர்.

"50 GB டேட்டாவை இலவசமாக வழங்குகிறோம் என்று வரும் குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் எச்சரிக்கையாக இருக்கவும்.." என தமிழக காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?