220 ஆண்டுகள், 8 தலைமுறை: பூட்டப்படாத வீட்டின் வரலாறு என்ன? twitter
தமிழ்நாடு

220 ஆண்டுகள், 8 தலைமுறை: பூட்டப்படாத வீட்டின் வரலாறு என்ன?

Keerthanaa R

சுமார் 220 ஆண்டுகளாக தஞ்சாவூரில் இருக்கும் இந்த வீடு பூட்டப்படாமலேயே இருக்கிறது. இது அந்த வீட்டை கட்டியெழுப்பிய பெண்மணியின் ஆசையாம்.

8 தலைமுறைகளாக இங்குள்ளவர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். யாரும் இந்த வீட்டை விட்டு வெளியேறவில்லை.

இந்த வீட்டின் வரலாறு என்ன?

தஞ்சாவூரின் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது நடுக்காவேரி கிராமம். இந்த கிராமத்தின் அடையாளமாக இரண்டு நூற்றாண்டுகளாக திகழ்கிறது இந்த வீடு. 1898ல் புண்ணக்கு என்ற பெண் இந்த வீட்டை கட்டியுள்ளார்.

யோகபுரி நாட்டாரின் இந்த பரம்பரை வீடு, முழுக்க முழுக்க பெண்களால் கட்டப்பட்டுள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது மிகப்பெரிய கவனத்திற்குரிய விஷயம்.

இந்த வீட்டிற்கு பல சிறப்புகள் உள்ளன.

இந்த வீட்டில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் யாரும் இது வரை வீட்டை காலி செய்து கொண்டு வெளியேறியது இல்லை. இவர்கள் சென்று விடக் கூடாது என்பது இந்த வீட்டை கட்டிய பெண் புண்ணக்கின் ஆசையும் கூட.

இதன் காரணமாகவும், யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் வீட்டில் தஞ்சம் கொள்ளலாம் என்ற நல்லெண்ணத்தில், வீட்டின் முன் மற்றும் வெளிப்புற வாசற் கதவுகள் இரண்டும் திறந்தே இருக்கும். காலை மாலை இரவு வேளைகளில் என இந்த கதவுகளை இன்று வரை பூட்டியதே இல்லை.

ஆனால் கதவுகளில் தாழ்ப்பாள்கள் உள்ளன. சுண்ணாம்பு காரை கொண்டு இரண்டு அடி அகலத்தில் சுட்ட கல்லால் கட்டப்பட்டிருக்கிறது இந்த வீடு. இதில் கவனிக்கப்படவேண்டிய சிறப்பு என்னவென்றால், காவிரி ஆற்றில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் தாக்கலாம் என்பதால், 8 அடி உயரத்தில் இந்த வீட்டை கட்டியுள்ளனர்

முன்பே சொன்னது போல 8 தலைமுறைகளாக இதன் பழமையை விட்டுவிடாமல் இங்கு வாழ்பவர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். சென்னை, பெங்களூரு, ஏன் அமெரிக்காவுக்கு கூட இந்த குடும்பத்தினர் வேலை அல்லது படிப்பு நிமித்தமாக சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களின் வாரிசுகள் அல்லது மூத்த தலைமுறையினர் என்று யாராவது வீட்டில் நிச்சயம் தங்கிவிடுகின்றனர்.

பெரிய அளவு கருங்கல்லால் ஆன ஆட்டுக்கல், அம்மிக்கல், நெல் கொட்டும் குதிர், உரல் உலக்கை போன்ற அந்த காலத்து பொருட்களும் பயன்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியுடனும், குளிர்காலத்தில் கதகதப்பாக இருக்கும் வண்ணமும் இந்த வீடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது

வீட்டினை ஒருபோதும் யாரும் பாகப் பிரிவினை செய்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு புறத்தில் படுக்கையறை, மற்றொரு புறத்தில் சமையல் அறை கட்டப்பட்டுள்ளது.

இன்று வாழும் தலைமுறையினர் கூட அவர்களின் மூதாதயர்கள் பின்பற்றிய வழக்கங்களை விட்டுவிடாமல் பின்பற்றி வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?