kallakurichi protest Twitter
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பஸ்களுக்கு தீ வைப்பு; 144 தடை உத்தரவு - விரிவான தகவல்கள்

போர்க்களமாக மாறியுள்ள அப்பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Priyadharshini R

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

Death

மாணவியின் இறப்பில் மர்மம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை

மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், உடல் கூறு ஆய்வு தொடங்குவதற்கு 36 மணி முதல் 48 மணி நேரத்திற்கு முன்பே மாணவி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்தன என்று நேற்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம்

இதனையடுத்து மாணவிக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது மாணவர்களை போலீசார் பேரிகேடை வைத்துத் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கற்கள் வீசப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீஸ் பாதுகாப்புக்காக வந்த வேன்களை அடித்து நொறுக்கியும் பள்ளியின் முகப்புகளைக் கற்களால் அடித்து நொறுக்கியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. மேலும் மாணவியின் இறப்புக்கு நியாயம் கேட்டும் குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் பள்ளியின் தாளாளரைக் கைது செய்து அப்பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவு

பள்ளியிலிருந்து பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களைப் போராட்டக்காரர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். போர்க்களமாக மாறியுள்ள அப்பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Sylendra Babu

டிஜிபி சைலேந்திர பாபு

காவலர்கள் ,காவல்துறை வாகனங்கள், பள்ளிக்கூடத்தைத் தாக்குவது, சூறையாடுவது உடனடியாக போராட்டக்காரர்கள் நிறுத்த வேண்டும்.

மேலும், கலவரத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?