தமிழை எழுத்து பிழையுடன் ட்வீட் செய்த குஷ்பூ ட்விட்டர்
Viral Corner

தமிழை எழுத்து பிழையுடன் ட்வீட் செய்த குஷ்பூ- ட்ரால் செய்த நெட்டிசன்கள்

தமிழ் என்ற வார்த்தையில் இருக்கும் ’ழ’கரத்திற்கு பதிலாக, ’ல’ என்ற எழுத்தை குஷ்பூ பயன்படுத்தியிருந்தார். இதை கவனித்த பலரும், குஷ்பூ மற்றும், பாஜகவினர் தொடர்ந்து தமிழை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

Keerthanaa R

காசியில் நடத்தப்பட்ட தமிழ் சங்கமம் குறித்து டிவிட்டரில் பேசிய நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ, தமிழில் எழுத்துப்பிழையுடன் ட்வீட் செய்திருந்தார். இது இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இளையராஜா காசியில் தமிழ் சங்கமம் நடத்தியதற்காக நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 20 ஆம் தேதி நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஆங்கிலத்தில் ஒரு சில வார்த்தைகள் கூறிவிட்டு கடைசியில் தமிழ் வாழ்க, தமிழ் மொழி வாழ்க என பதிவிட்டிருந்தார். ஆனால், தமிழ் என்ற வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்தது.

தமிழ் என்ற வார்த்தையில் இருக்கும் ’ழ’கரத்திற்கு பதிலாக, ’ல’ என்ற எழுத்தை குஷ்பூ பயன்படுத்தியிருந்தார். இதை கவனித்த பலரும், குஷ்பூ மற்றும், பாஜகவினர் தொடர்ந்து தமிழை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

இந்த எழுத்துப்பிழையை கவனித்த குஷ்பூ மீண்டும் ஒரு ட்வீட்டில் அதை சரி செய்து, Sorry for the typo error என்று சொல்லி மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், மன்னிப்பு என்ற வார்த்தையிலும் எழுத்துப்பிழை இருந்தது. இதனால் நெட்டிசன்கள் பலரும் நடிகை குஷ்பூவை ட்ரால் செய்யத் துவங்கினர்.

”இன்று உலகளவில் தமிழ் மொழி அறிய செய்ததற்கும், தமிழருக்கு கிடைக்கும் மரியாதைக்கும், தமிழ் கலாச்சாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளதற்கும் முக்கிய காரணம் பிரதமர் மோடி தான் என்றும், இதற்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். உங்களை பின்பற்றுபவர்களாக அல்ல, ஒரு தமிழனாக” எனக் கூறி மிக்க நன்றி!

தமில் வாழ்க, தமில் மொழி வாழ்க!” என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தான் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் தன் தமிழில் இருந்த எழுத்துப்பிழையை எடுத்துக்காட்டியதற்காக மீண்டும் நன்றி தெரிவித்திருந்தார் குஷ்பு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?