மத்திய பிரதேசம் மாநிலம் மொரெனா மாவட்டத்தில் உள்ள ஜூரா தொகுதியின் எம்.எல்.ஏ சுபேதர் சிங் ராஜோதா.
பாஜகவைச் சேர்ந்த இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியல்வாதிகள் மேடையில் பேசுவதற்கும், அவர்களின் உண்மை முகத்துக்குமான வித்தியாசத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும் படியாக இருக்கிறது அந்த வீடியோ.
அதில், பெண் ஒருவர் மது ஒழிப்பைக் கொண்டுவர வேண்டும் என அந்த எம்.எல்.ஏ-விடம் கேட்கிறார். அதற்கு அவர் அளித்துள்ள பதில் தான் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
அந்த பெண்ணிடம் பாஜக எம்.எல்.ஏ சுபேதர் சிங் ராஜோதா, "நான் ஒரு மது காண்ட்ராக்டர்... எப்படி நிறுத்த முடியும்" என பதிலளிக்கிறார்.
இப்படி அப்பட்டமாக ஒரு எம்.எல்.ஏ பதிலளிப்பது அவரது தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே திகைப்பாக இருக்கிறது.
ட்விட்டரில் இந்த வீடியோ பரவிவருகிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் இந்த வீடியோவை முன்னிட்டுக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
"இந்த வீடியோ மூலம் சிவ்ராஜின் அரசாங்கம் மொத்த மாநிலத்தையும் மதுவில் மூழ்கடித்திருப்பது வெட்டவெளிச்சமாகிறது" என விமர்சித்துள்ளார் மத்தியபிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் ப்ரதாப் சிங்.
மேலும் அவர், "கிராமங்களிலும் நகரங்களுக்குள்ளும் மது கடத்தப்பட்டு விற்கப்படுகிறது. இப்போது அந்த கடத்தல் கும்பல் யாரெனத் தெரிகிறது" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக பாஜகவின் உமா பாரதி, சிவ்ராஜ் சவுகான் ஆகியோர் மத்தியபிரதேசத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust