Youngsters Twitter
Viral Corner

Vibing, Simping, Dank: 2கே கிட்ஸ் பயன்படுத்தும் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா?

இதனை இன்டர்நெட் ஸ்லாங் எனலாம். இந்த இன்டர்நெட் ஸ்லாங் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. வித்தியாசமான பல வார்த்தைகளைப் பார்க்க முடிகிறது. இந்த வார்த்தைகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?

Antony Ajay R

இந்த வரலாறு SMS காலத்தில் தொடங்கியது. ஒரு வேளை கடுதாசி காலத்திலும் இருந்திருக்கலாம்.

ஊர்புரங்களில் குழந்தைகள் விளையாடும் போது வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். அதற்கு பெரிதாக அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியாது. ஆனால் பெரியவர்கள் எப்போதும் பேசும் வார்த்தைகளை அவர்கள் சுருக்கிப் பேசத் தொடங்கி, அது ஒரு பழக்கமாக வளர்ந்திருக்கிறது.

இப்போது இதனை இன்டர்நெட் ஸ்லாங் எனலாம். இந்த இன்டர்நெட் ஸ்லாங் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. வித்தியாசமான பல வார்த்தைகளைப் பார்க்க முடிகிறது. இந்த வார்த்தைகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?

Vibing :

ஒரு அலாதியான நல்ல உணர்வைக் குறிப்பதாகும். பொதுவாக நல்ல பாடல்களைப் பற்றிப் பேசும் போது "Vibe-ஆ இருக்குதுப்பா இந்த பாட்டு" எனக் கூறுவதை கவனிக்கலாம்.

vibe ஆங்கிலத்தில், "a distinctive feeling or quality capable of being sensed" என விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, "ஒரு தனித்துவமான தரமான உணர்வு(feeling)"

ஒரு இடத்தை குறிப்பதற்காகவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, "எங்க ஊரு செம்ம வைப்பா இருக்கும்"

Simp :

1987 -ல் வெளியான ஆங்கில ராப் பாடல்களிலேயே சிம்ப் என்ற வார்த்தை இருந்திருக்கிறது. ஆனால் இன்றையத் தலைமுறையினர் தான் இந்த வார்த்தையை வித்தியாசமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

சிம்ப், பெண்களைக் ஈர்ப்பதற்காக மெனக்கெட்டு பேசும் ஆண்களை குறிக்கிறது.

பொதுவாக வலிந்து "சாப்டீங்களா?, தூங்கினீங்களா?, உங்க போட்டோ நல்லா இருக்கு" என மெசேஜ் செய்பவர்களை காலாய்க்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

இது பெண்களின் மதிப்பைக் குறைக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

Boomer :

பொதுவாக வயதானவர்களைக் குறிக்க இது பயன்படுகிறது.

அதிகமாக அட்வைஸ் செய்வது, தான் செய்ததை வலிந்து சொல்லிக் காண்பிப்பது, இன்றைய இளம் தலைமுறைக்கு ஒட்டாத விஷயங்களைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பது, பழைய ஜோக்குகளை உபயோகிப்பது என பல விஷயங்கள் பூமராக கருதப்படுகிறது.

இளம் தலைமுறையினரே சிலர் அட்வைஸ் செய்தால், "ஓகே பூமர்" என்று தான் பதில் வரும். இது தலைமுறைகளைப் பிரிக்கும் சொல் மட்டுமல்ல!

Bet

இது ஜென் சி மட்டுமல்லாமல் மில்லினியல் நபர்களுக்கும் பழக்கமான வார்த்தை தான். அதாவது 90'ஸ் கிட்ஸ் காலத்தில் அதிகம் புழக்கத்தில் இருந்த வார்த்தை.

இதனை பந்தயம் எனக் கூறலாம். ஜல்லிக்கட்டு கூட ஒருவித பந்தையம் தான்.

ஒரு பந்தயத்தில் வெற்றி பெறுபவரும் தோல்வியடைபவரும் எவற்றை ஏற்க நேரிடும் என்ற ஒப்பந்தம் தான் பெட்.

இது அமெரிக்க கருப்பின மக்களிடம் இருந்து பிறந்ததாக கருதப்படுகிறது.

Hits Different

இந்த வார்த்தை பேச்சளவில் பயன்பாட்டில் இல்லை என்றாலும் பதிவுகளிலும் மெஸ்சேஜ்களிலும் இதனைக் காண முடியும்.

எதாவது ஒரு விஷயம் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தினால் அதனை Hits Different எனக் குறிப்பிடலாம். ஒருவர் தன்னுடைய பாடல் ப்ளே லிஸ்டை பகிர்ந்தால் Hits Different என கமன்ட் செய்யலாம்.

Drip

தன்னம்பிக்கையுடன், செருக்குடன் நடப்பது. Swag என்ற முந்தைய தலைமுறை வார்த்தையின் அடுத்த கட்டம் ட்ரிப்.

ஆனால் முந்தைய தலைமுறையினர் "ஈர்பில்லாத, சலிப்பை ஏற்படுத்தக் கூடிய நபர்" எனக் குறிப்பதற்காக ட்ரிப் என்ற வார்த்தையை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chad

ஆல்ஃபா மேல் என்பதன் ஸ்டீரொயோடைப் வடிமாக இருப்பவரை சாட் எனலாம்.

அமெரிக்க ஜென் சி நபர்கள் பயன்பாட்டின் படி, "popular, confident, sexually active young white male." என விளக்கம் கொடுக்கப்படுகிறது.

இதில் white male என்ற வார்த்தையை கொஞ்சம் அரசியல் ரீதியாக அனுக வேண்டியிருக்கும்.

Dank

வெளிநாடுகளில் கஞ்சா பயன்பாட்டை குறிப்பதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.

ஆனால் நம் நெட்டிசன்கள் வேறலெவல் என்ற வார்த்தையை டான்க் என்று பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக மீம்களில். மிகவும் வித்தியாசமான மீம்கள் டான்க் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Ghosting

ஒருவரை நட்பு வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவது கோஸ்டிங் எனலாம்.

மிகவும் மெதுவாக யாருக்கும் தெரியாமல் ஒருவரை விலக்கிவைப்பது, முக்கியத்துவம் கொடுக்காமல் விடுவது கோஸ்டிங்.

உதாரணமாக, "அவன் தொன தொனன்னு பேசிட்டே இருந்தான். அதான் கோஸ்ட் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன்" என இருவர் பேசிக்கொண்டிருப்பதை கேட்டிருக்கலாம்.

கோஸ்டிங் செய்வது சக மனிதரைப் புண்படுத்துவது. இது தவறானது என்ற கருத்துக்களும் உள்ளது.

Woke

இந்த வார்த்தை ஆப்ரிக்க - அமெரிக்க குறுமொழியிலிருந்து (Slang) வந்தது.

அரசியல் ரீதியில் ஒடுக்கப்படுவதில் இருந்தும் தாழ்த்தப்படுவதிலிருந்தும் விழிப்புடன் இருப்பது Woke ஆகும்.

Wake என்றால் தூக்கத்திலிருந்து விழிப்பது என்பதைப் போல Woke அரசியல் ரீதியில் விழிப்படைவது.

இதுவும் டெக்ஸ்டிங்கில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை.

GOAT

கோட் என்றால் ஆடு தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை இது உண்மையில், G.O.A.T - இதற்கு Greatest of All Time என்று பொருள்.

சிறந்த விளையாட்டு வீரர்களை அல்லது ஒரு விஷயத்தில் லெஜண்டாக இருப்பவர்களை இவ்வாறு கூறலாம்.

சில பெயர்களை ட்விட்டரில் பதிவிடும் போது ஹேஷ்டேக் அருகிலேயே ஆடு எமோஜி வருவதற்கும் இது தான் காரணம்.

Toxic

Tox என்றால் நச்சு அல்லது விஷம் என்று பொருள். மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த நபர்களை இவ்வாறு கூறுவர்.

ஒரு அப்பா மகனை அடித்தார் எனில், "எனக்கு வாச்சதெல்லாம் டாக்ஸிக் அப்பாடா" என மகன் பள்ளியில் கூறலாம்.

இது போன்ற பல வார்த்தைகளை புதிதாக பயன்படுத்துவது இளசுகளுக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று தான். தமிழிலும் புள்ளிங்கோ, வன்மம் போன்ற வார்த்தைகள் இணையத்தில் அதிகம் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?