Mother's Day: அம்மாக்களை கௌரவிக்க Cute-ஆன Doodle வெளியிட்ட Google! Twitter
Viral Corner

Mother's Day: அம்மாக்களை கௌரவிக்க Cute-ஆன Doodle வெளியிட்ட Google!

Antony Ajay R

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே அம்மாக்கள் சுமக்கும் பாரமும் ஆற்றும் கடமைகளும் வெளியில் தெரிவதே இல்லை.

இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இதே நிலை தான் இருக்கிறது. ஒரு தாயாக பெண் ஆற்றும் கடமைகளுக்கு அங்கீகாரமென்பது கிடைக்கப்பெற்றதே இல்லை.

இந்த நாளில் உங்கள் அம்மாவையும் அல்லது உங்களுக்கு தெரிந்த அம்மாக்களையோ அவர்களது உழைப்புக்காக கௌரவிக்க தருணம் கிடைக்கிறது.

கூகுள் உலகம் முழுவதுமுள்ள அம்மாக்களை கௌரவிக்கும் விதமாக டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் மனதுக்கு இதமான உணர்வைக் கொடுப்பதனால் அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

அன்னையர் தினம் அன்னா ஜார்விஸ் என்ற பெண்ணால் முதன்முறையாக 1908 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அவர் ஒரு அமைதி செயற்பாட்டாளர். அமெரிக்க சிவில் போரில் காயப்பட்ட வீரர்களுக்கு மருத்துவம் பார்க்கும் சேவையை செய்து வந்தார்.

இன்று வரை குழந்தைகள் பல வழிகளில் அம்மாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் ஆக்டோபஸ் முதல் சிங்கம் வரை பல விலங்குகள் அம்மாவாக சித்தரிக்கப்பட்டுள்ளன. க்யூட்டான படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும்.

கூகுள் எல்லா முக்கிய தினங்களிலும் டூடுல் வெளியிட்டு வருகிறது. இதுவரை 4000த்துக்கும் மேற்பட்ட டூடுல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?