Travel Canva
Viral Corner

தனியாக பயணிக்க வேண்டுமென்றால் இந்த ட்ரிக்கை பயன்படுத்தலாம் - வைரலாகும் டிராவல் அட்வைஸ்

ஒரு வேளை நம் அருகில் உட்காருபவர்களோடு நமக்கு ஒத்துப்போகாவிட்டால் என்ன செய்வதென்ற யோசனை நம் எல்லாருக்கும் வரும். அப்படி நீங்கள் பயப்படும் நபர் என்றால், இதோ இவரது இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Keerthanaa R

விமானத்தில் பயணிக்கும் போது நமது பக்கத்து இருக்கையை எப்படி காலியாக வைத்துக்கொள்வது என்று ஒருவர் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.


நாம் குடும்பத்தினரோடு, அல்லது நண்பர்களோடு பயணிக்கும்போது, அருகில் உட்காராப்போகிறவர்கள் பற்றிய கவலை நமக்கு இருக்காது. ஆனால், தனியாக பயணிக்கவேண்டும் என்றால், நம் மொத்த பயணத்தின் கதையையும் முடிவு செய்யப்போவது நம் அருகில் உட்காருபவர்கள் தான். இவர்களால் பயணம் சுவாரஸ்யமாகவும் மாறலாம். அல்லது அது ஒரு கெட்ட அனுபவமாகவும் ஆகிவிடலாம்.

ஒரு வேளை நம் அருகில் உட்காருபவர்களோடு நமக்கு ஒத்துப்போகாவிட்டால் என்ன செய்வதென்ற யோசனை நம் எல்லாருக்கும் வரும். அப்படி பயப்படும் நபர் என்றால், இதோ இவரது இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.


மைக் டேவிஸ் என்ற நபர், விமானத்தில் பயணிக்கும் போது நமது பக்கத்து இருக்கையை எப்படி காலியாக வைத்துக்கொள்வது என்று ஐடியா ஒன்றை சொல்லி டிக் டாக்கில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

டேவிஸ் பதிவிட்ட அந்த வீடியோவில், அவர் தன் இருக்கைக்கு பக்கத்தில் இருக்கும் காலி சீட் மீது தட்டுகிறார். இது பார்ப்பதற்கு வருபவர்களை தன் அருகில் உட்காருமாறு செய்கை காண்பிக்கிறார்.

அதுவும் அவர்கள் கண்களை நேர பார்த்து. பிளேனில் உள்ளே வரும் பயணிகள் அவர் அழைப்பதாக நினைத்து, அருகில் உட்காராமல் வேறு இடத்தில் உட்கார செல்கின்றனர்.


ஆக, இவரது இருக்கைக்கு பக்கத்து இருக்கை காலியாகவே இருக்கிறது. இது தான் அந்த டிரிக். அமெரிக்காவின் டொமெஸ்டிக் பிளேன்களில் சில, பயணிகளுக்கு அவர்கள் விரும்பும் இருக்கையில் அமர்ந்துக்கொள்ளலாம்.

சிலர் இதை நல்ல ஐடியா என்று டேவிஸை பாராட்டி வருகின்றனர். அதிலும் ஒருவர், "மூன்று பேர் உட்காரும் இருக்கையில், நடுவில் அமர்ந்துவிட்டு, இரண்டு பக்கமும் இப்படி சைகை காண்பித்தால், இருபக்கமும் காலியாக இருக்கும்" என்றார்.


இன்னொருவர், இப்படி தான் சென்று அமர்ந்த பிறகு, அருகில் யாரேனும் அமர வந்தால் இருமுவது போல நடிப்பாராம். வருபவர்களும், இவருக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று நகர்ந்து சென்று விடுவார்களாம். பல ஆண்டுகளாக இப்படி செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த டிரிக் எல்லா நேரத்திலும் வேலை செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு வேளை அப்படி நாம் அழைக்கும்போது அந்த நபர் நம் அருகில் வந்து உட்கார்ந்துவிட்டால் கதை முடிந்தது.


அதிலும் பெண்களால் இந்த ஐடியாவை பயன்படுத்த இயலாது என்பது பல பெண் பயணிகளின் கருத்து.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?