4000 ரூபாய் கொடுத்து வாங்கிய நாற்காலியை 82 லட்சத்துக்கு விற்ற டிக்டாக் பிரபலம்- எப்படி? Twitter
Viral Corner

4000 ரூபாய் கொடுத்து வாங்கிய நாற்காலியை 82 லட்சத்துக்கு விற்ற டிக்டாக் பிரபலம்- எப்படி?

Antony Ajay R

டிஜிட்டல் கண்டண்ட் கிரியேட்டரான ஜஸ்டின் மில்லர் என்பவர் ஒரு பழங்கால நாற்காலியை எதேர்ச்சையாக பேஸ்புக் மார்கெட்டில் பார்த்திருக்கிறார்.

அந்த நாற்காலியைப் பார்த்ததுமே அவருக்கு “கண்ணா லட்டு திங்க ஆசையா” என மைண்ட் வாய்ஸ் கேட்டிருக்கிறது. ஏனெனில் அந்த நாற்காலியின் அருமைப் பெருமைகளை அவரால் கணிக்க முடிந்தது.

பேஸ்புக்கில் 50 டாலர் அதாவது 4000 ரூபாய் கொடுத்து அந்த நாற்காலியை வாங்கி ஏலத்தில் 2000 மடங்கு அதிக விலைக்கு விற்றுள்ளார். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் மில்லர் இந்த நாற்காலியை வைத்து சம்பாதிக்க முடியும் என்றாலும் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். 

இந்த செயலை சாத்தியமாக்கியதற்கு Antiques Roadshow என்ற பழம்பொருட்கள் விற்பனை நிகழ்ச்சியில் ஒவ்வொரு எபிசோடையும் அவர் பார்த்தது தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். 

“நான் இதில் நிபுணத்துவம் பெறவில்லை. ஆனால் என் கண்களுக்கு இது சுவாரஸ்யமான நாற்காலியாக தெரிந்தது.” என அவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் கூகுளில் தேடிய பின்னர் இதேப் போல ஒரு ஜோடி பழங்கால நாற்காலிகள் 2 லட்சம் டாலர்களுக்கு (சுமார் 1.6 கோடி) விலைப்போனது பற்றி தெரிந்துள்ளது. 

இதனால் இந்த நாற்காலி ஓரளவு நல்ல விலை போகும் என அவர் எதிர்பார்த்திருக்கிறார்.

Sotheby’s என்ற நுண்கலை நிறுவனத்தை அவர் நாடியிருக்கிறார். அவருக்கு நாற்காலியை சரிசெய்ய 3000 டாலர் வரை செலவாகியிருக்கிறது. 30,000 டாலர் வரை விற்பனையாகும் என்பது அவரது கணக்கு.

ஆனால் இறுதியில் எல்லாருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வண்ணம், 1,00,000 டாலர்களுக்கு அந்த நாற்காலி விலை போயிருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் டிக் டாக்கில் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?