Amazon Snake Cat என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது serpens Catus என்ற பூனை எனக் கூறப்பட்டு வருகிறது.
கருப்பு பூனையில் மஞ்சள் நிற கோடுகள் இருப்பது போல தோற்றமளிக்கிறது இந்த பூனை.
பார்க்க மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த பூனை உண்மையாகவே இருக்கிறதா? அல்லது ஏதேனும் போட்டோஷாப்பா என இணையவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
"serpens Catus உலகிலேயே மிகவும் அரிதான பூனை வகை. அமேசான் மழைக்காடுகளில் யாரும் செல்ல முடியாத பகுதிகளில் இவை வசிக்கின்றன, இவற்றைக் குறித்து நமக்கு அதிக தகவல்கள் தெரியாது. முதன்முதலாக 2020ல் தான் இது புகைப்படம் எடுக்கப்பட்டது. 4 ஸ்டொன் வரை எடை கொண்டது (25 கிலோ)."
என @Kamara2R என்ற ட்விட்டர் பக்கம் பதிவிட்டிருந்தது.
மார்ச் 14ம் தேதி பதிவிடப்பட்ட இந்த புகைப்படத்துக்கு லைக்குகள் குவிகின்றன.
இது நிஜமா, போலியா என விவாதித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இது கருஞ்சிறுத்தை மற்றும் பாம்பு படங்களைக் கொண்டு எடிட் செய்யப்பட்டது எனப் பலரும் கூறி வருகின்றனர்.
உண்மையாக இப்படி ஒரு உயிரினம் இருப்பதற்கு இணையத்தில் உலாவும் இந்த புகைப்படத்தைத் தவிர வேறு எந்த சாட்சியும் இல்லை.
மேலும், "உற்றுபார்த்தாலே தவறுகளை கண்டுபிடிக்கும் படி மோசமாக போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது" என ஒரு நெட்டிசன் கமண்ட் செய்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust