Kobe Twitter
Viral Corner

ஒரு பட்டாபட்டி டவுசரின் விலை 15 ஆயிரமா? முன்னனி பிராண்டை கலாய்த்த நெட்டிசன்கள்!

NewsSense Editorial Team

இந்த உலகம் முழுவதுமே நிரந்தரம் இல்லாத மற்றும் கணிக்க முடியாத விஷயங்களாக விளங்குவனவற்றில் ”ஃபேஷன்” முக்கியமான ஒன்றாகும். ஆடம்பரமான பிராண்டுகள் சாதாரண துணித் துண்டுகளைக் கூட அதிக விலைக்கு விற்பனை செய்வதை நாம் கடந்த காலங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த பட்டியலில் இப்போது, இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது. அது வேறொன்றுமில்லை, ஒரு ஜோடி நீல நிற ஸ்ட்ரிப் ஷார்ட்ஸ் தான், அதாவது நம்மூர் பாஷையில் “பட்டாபட்டி”

”Kobe” என்கிற ப்ராண்டின், அந்த புதிய ஆடையின் விளம்பரம், சில ட்விட்டர்வாசிகளின் கண்ணில் பட்டதும், வைரலாகி இருக்கிறது. உள்ளூரில் வெறும் 100 ரூபாய்க்கு கிடைக்கிற பட்டாபட்டி பொன்ற அந்த ட்ரவுசரை நீங்கள் அணிய வேண்டுமானால், ரூபாய் ₹15,450 செலவு செய்ய வேண்டும். ஆம், அந்த ஒரு ட்ரவுசரின் விலை 15,450 ரூபாய் ஆகும்.

அர்ஷத் வாஹித் என்ற ட்விட்டர் பயனர், இந்த ட்ரவுசரின் விளம்பரம் மற்றும் விலையைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்த பிறகு, இது இணையத்தில் பேசுபொருளானது. அந்த பதிவில் அர்ஷத், “ஏன் இந்த பட்டா பட்டி 15 ஆயிரம்?” என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

அர்ஷத்தின் அந்த ட்விட்டை தொடர்ந்து, அப்படி என்ன அந்த ட்ரவுசரில் இருக்கிறது? ஏன் இவ்வளவு விலை? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதில் ஒருவர் ''அப்படி யார் தான் இவ்வளவு விலைக்கு, இந்த இணையதளங்களிலிருந்து துணிகளை வாங்குவது?'' என்று நையாண்டி செய்திருந்தார்.

''என் தாத்தா இவற்றை அணிந்திருந்தார், அவரிடம் டேட் டேம் பேப்பர் இருப்பது தெரியாது'' என்று மற்றொருவர் எழுதினார்.

இதேபோலத் தான், கடந்த ஆண்டு ”சப்யாசாச்சி” மிகவும் சாதாரணமான புடவையை அபத்தமான விலையில் விற்றதற்காக ட்ரோல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?