Anti Love

 

Twitter

Viral Corner

Anti Valentine's Week : Slap Day - Single's Week குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பிப்ரவரி 15 வெலன்டைன்ஸ் டே-க்கு அடுத்த நாளிலிருந்து ஆன்டி வெலன்டைன்ஸ் டே ஆரம்பிக்கிறது. இது சிங்கிள்ஸ் கான வாரம். பிரேக்-அப் ஆனவர்கள் கொண்டாட்டத்துக்கான வாரம். காதல் தோல்வியும் காதலின் அங்கம் தான் எனக் கூறும் இந்த வாரத்தில் என்னென்ன நாட்கள் உள்ளன, அவற்றின் குறிக்கோள்கள் என்ன என்பதைக் காணலாம்.

Antony Ajay R

முதல் நாள் Slap Day

முதல் நாள் அரைவதற்கான நாள். உங்களை ஏமாற்றிய அல்லது உங்களை விட்டுச் சென்ற உங்கள் முன்னாள் காதலர், காதலியை அரைவதற்கான நாள். ஒரு காதலிலிருந்து விலகிச் செல்லும் எல்லாருக்கும் அவர்கள் தரப்பு நியாயங்கள் இருக்கத் தான் செய்யும். எனவே உங்கள் முன்னாள் காதலர்கள் நினைவுகளை அரைந்து விட்டு, மூவ் ஆன் ஆக இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Kick

இரண்டாம் நாள் Kick Day

ஒரு காதல் கடந்து செல்லும் போது பல வலிகளைக் கொடுத்துவிட்டுப் போகிறது. காதலிலிருந்து விட்டு இப்போது சிங்கிளாக மாறியிருப்பவர்கள் ஒரு மூட்டை நெகட்டிவிட்டியை தூக்கிக்கொண்டுதான் உலாவுகின்றனர். அந்த மூட்டையை இறக்கி வைத்து foot ball விளையாடுவதற்கான நாள் இந்த கிக் டே! நீங்கள் இதுவரை காதலிக்காத, காதலிக்கப்படாத சிங்கிளாக இருந்தால் காதலித்து தொல்லை செய்யும் உங்கள் நண்பருக்கு ஒரு உதையை பரிசளியுங்கள்.

Self Confidence

மூன்றாம் நாள் Perfume Day

ஒரு காதல் தோல்வி அந்த குறிப்பிட்ட இரண்டு நபர்களுக்கு இடையிலான உறவு இணக்கமாக இல்லை என்பதை மட்டுமே காட்டுகிறது. தவிர அதில் யாரும் யாருக்கும் கீழானவர்கள் இல்லை. உங்கள் முன்னாள் ஒரு வேளை உங்களை அப்படி உணர வைத்திருந்தால் நம்பாதீர்கள். எழுந்து perfume அடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சிறந்த நபர் என்பதனை உணருங்கள். உங்களுக்காக ஒரு காதல் காத்திருக்கிறது அதைத் தேடிச் செல்லுங்கள்…

Flirting

நான்காம் நாள் Flirting Day

காதலர் தினத்தைக் கொண்டாட முடியாமல் சிங்கிளாகவே இருக்கும் உங்கள் மனதில் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் இந்த நாளை அவர்களுக்காக ஒதுக்கிக்கொள்ளுங்கள். அவர்களிடம் சென்று நீங்கள் பயிற்சி செய்து வைத்திருக்கும் பிக் அப்-லைன்களை பயன்படுத்துங்கள். அதிகம் பேசுங்கள். பேச்சு, வார்த்தைகள், மொழி உங்கள் காதலை கண்டுபிடிக்க உதவும் கருவி. அச்சம் களைந்து போதிய நாணத்துடன் உங்களுக்கானவர்களை அணுகுங்கள்.

Love 

ஐந்தாம் நாள் Confession Day

பிரிந்து சென்ற உங்கள் முன்னாள் காதலர் / காதலியாகவோ, நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்த நண்பராகவோ அவர் இருக்கலாம். அவர்களிடத்தில் உங்களைக் குறித்து விளக்குங்கள். உங்கள் கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். ஒரு காதலை அடைய உங்கள் இணையிடத்தில் உங்களை முழுவதும் வெளிப்படுத்தியிருக்க வேண்டியது அவசியம் அதற்கான நாள் இந்த Confession Day.

Love

ஆறாம் நாள் Missing Day

உண்மையாக அவர்களை மிஸ் செய்கிறீர்களா? அவர்கள் இல்லாத வாழ்க்கை வெறுமை நிறைந்ததாக இருக்கிறதா? வலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா? உங்கள் தவறுகளை உணர்ந்து விட்டீர்களா? இந்த நாளில் அந்த நபர் இல்லாத உங்கள் வாழ்க்கை எவ்வளவு துயர் மிகுந்ததாக உள்ளது, அவர்களைக் குறித்த தேடல் எவ்வளவு ஆழமானதாக உள்ளது என அவர்களுக்குச் சொல்லுங்கள்.

தயவு செய்து உங்கள் முன்னாள் காதலிக்குப் பக்கம் பக்கமாக மெசேஜ் அனுப்ப வேண்டாம். நிச்சயம் அவர்கள் வாசிக்கப்போவதில்லை.

Break up

ஏழாம் நாள் Break up Day

ஆன்டி வெலன்டைன்ஸ் வாரத்தின் கடைசி நாள் ப்ரேக் அப் டே. காதல் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டது, குபிட் குறிப்பெழுதி வைப்பது என எவ்வளவு புனிதப்படுத்தினாலும் காதலில் தவறுகள் நிகழ்வது மிக சாதாரணமானது. அதனை கடந்து செல்லுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களுக்கானவராக இல்லாமலிருக்கலாம், உங்கள் இருவருக்கும் இணக்கம் இல்லாமல் இருக்கலாம், சந்தோஷ மலைப்பின் உச்சியில் உங்களை வைத்திருக்க வேண்டிய உங்கள் காதலர் / காதலி உங்களுக்கு வெறுப்பையும் வருத்தத்தையும் தரலாம், உங்களைச் சந்தேகப்படும் ஒருவராக இருக்கலாம் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பிரேக்கப் மட்டும் தான். உங்களால் முடிந்ததும் அதுவே. விலகிச் செல்லுங்கள் உங்கள் வாழ்க்கையை, அதனை அழகாக்கும் காதலை நோக்கிச் செல்லுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?