​Iberian ham  canva
உலகம்

மூஸ் சீஸ் முதல் மாட்சுடேக் காளான்கள் வரை : உலகிலேயே விலை உயர்ந்த 7 உணவுகள்!

Antony Ajay R

உணவு நாம் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் உயிர்வாழ்வதற்காக மட்டும் இல்லாமல் வாழ்வில் சுவையேற்ற நாம் பலவகையான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுவோம்.

அப்படி நாம் விரும்பி சாப்பிடும் உணவுகளுக்கு அதிகமாக செலவு செய்யவும் தயாராக இருப்போம். ஆனால் அதற்காக இவ்வளவா? என வியக்க வைக்கும் அளவு அதிக விலைக் கொண்ட 10 உணவுப் பொருட்களைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இந்த உணவுகள் கோடீஸ்வரர்களின் தட்டில் மட்டுமே இருக்கக் கூடியவை.

Moose Cheese மூஸ் சீஸ்

சீஸ் எப்போதுமே பால் பொருட்களில் அதிக விலைக்கு விற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இந்த மூஸ் சீஸ் மூஸ் மானின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஸ்வீடனில் மட்டுமே இது கிடைக்கும்.

இதன் விலை 1 கிலோவுக்கு 1000 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் ஏறத்தாழ 80,000 ரூபாய்.

எல்க் ஹவுஸ் எனப்படும் இரண்டு சகோதரிகளால் நடத்தப்படும் பண்ணை தான் மிகப் பெரிய மூஸ் சீஸ் தயாரிப்பு மையமாக அறியப்படுகிறது

White Truffles வெள்ளை டர்ஃபிள்கள்

வெள்ளை டர்ஃபிள்கள் நிலத்துக்கு அடியில் வளரும் ஒருவகை பூஞ்சைகளாகும்.

இது ஐரோப்பியாவில் மட்டுமே வளரக்கூடியது. வெள்ளை டர்ஃபிள்களை வளர்ப்பதும் கண்டறிவதும் மிகவும் கடினம். இது ஒரு பவுண்ட் அதாவது 450 கிராம் 1000 அமெரிக்க டாலர்கள்.

Ayam Cemani Black Chicken அயம் செமனி கருப்பு கோழி

இந்தோனேசிய வகையான இந்த கருப்பு கோழி சுவையும், சத்தும் மிகுந்ததாக கருதப்படுகிறது.

இதனை ஒரு கிலோ 200 அமெரிக்க டாலர்கள் அதாவது 16,000 ரூபாய்க்கு பெறலாம். ஆனால் வெளிநாடுகளில் கிலோ 1000 டாலர்கள் மதிப்பில் தான் கிடைக்கும்.

பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக இவை மிகக் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

​Iberian ham ஐபீரியன் ஹாம்

Jamón Ibérico என்ற ஸ்பானிய உணவு வகையானது ஐபீரியன் ஹாம் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது ஒரு பன்றிக்கறி.

ஸ்பெயின் மற்றும் போர்சுகல் நாட்டில் மட்டுமே கிடைக்கும் ஐபீரியன் பன்றிகளின் இறைச்சி தான் உலகிலேயே விலை உயர்ந்த பன்றிக்கறியாகும்.

இந்த இறைச்சி சுவையானதாக இருக்க பன்றிகள் வளரும்போது விலை உயர்ந்த ஓக் விதைகளை மட்டுமே அவற்றுக்கு கொடுப்பார்கள்.

இந்த பன்றியின் ஒரு தொடை மட்டும் 4500 அமெரிக்க டாலர்கள்.

Saffron - குங்கும பூ

குங்கும பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய ஒன்று.

இதனை வளர்த்து பக்குவப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவருவது மிகவும் கடினமானது. குங்கும பூ மிகவும் லேசானதும் கூட. ஒரு கிலோவில் 3 லட்சம் பூக்கள் இருக்கும்.

ஆண்டுக்கு ஒரு வாரம் மட்டுமே பூக்கும் இதன் விலை 400 முதல் 1000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.

Kopi Luwak கோபி லுவாக்

உலகின் மிகவும் விலை உயர்ந்த காபி கொட்டைகள் இவை. பொதுவாக ஃப்ரெஷான பொருட்கள் விலை அதிகமாக இருக்கும் ஆனால் இந்த காபி கொட்டைகள் ஆசிய பாம் சிவெட் எனப்படும் ஒருவகை பூனையால் செரிக்கப்பட்டவை.

இந்த பூனைகளுக்கு ஆயிரக்கணக்கான காபி பழங்கள் உண்ணக் கொடுக்கப்பட்டு அவற்றின் மலத்திலிருந்து பாதி செரிக்கப்பட்ட கொட்டைகள் சேகரிக்கப்படுகின்றன.

அணில் கடித்த பழம் சுவையானதாக இருக்கும் என்பதைப் போன்ற லாஜிக் தான். இது ஒரு கிலோ 700 டாலர்கள் வரை விலைபோகிறது.

Matsutake Mushrooms மாட்சுடேக் காளான்கள்

இந்த வகை அரிய காளான்கள் ஜப்பானில் கிடைக்கின்றன. இவை இனிப்பும் காரமும் கலந்த சுவையைக்காக விரும்பப்படுகின்றன.

இந்த காளான்களை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். இதனை பக்குவமாக வளர்ப்பதும் எளிய காரியமில்லை.

இது கிலோ 600 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?