hanna - baba vanga Twitter
உலகம்

2022 -ல் ஒரு பாபா வாங்கா? 11 நிகழ்வுகளை சரியாக கணித்த 19 வயது பெண்; அடுத்த கணிப்பு என்ன?

இங்கிலாந்து அரசியின் மரணம், பாடகி டைலர் ஸ்விஃப்ட்டின் திருமண அறிவிப்பு, பிரபல வெப் சீரீஸ் ஆன கிரேஸ் அனாடமியின் இறுதி சீசன், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதிக்கு குழந்தை போன்றவற்றை அவர் கணித்திருந்தார்.

Keerthanaa R

பாபா வாங்கா போல இந்த 19 வயது பெண் கூறும் ஆருடங்களும் பலிக்கின்றன. தற்காலத்தின் பாபா வாங்கா என இணையவாசிகளால் அழைக்கப்படுகிறார் ஹான்னா கேரோல் என்ற பெண் ஒருவர்.

19 வயதாகும் ஹான்னா கேரோல், 2022 ஆம் அண்டு துவங்கியபோது கூறிய ஆருடங்களில் 11 விஷயங்கள் தற்போது வரை பலித்திருக்கிறது. அவற்றில் இந்த ஆண்டு இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் மரணமும் அடங்கும்.

Baba Vanga

கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் கணித்த பல சம்பவங்கள் தற்போது வரை நிஜத்தில் நடந்துள்ளது. சோவியத் யூனியன் உடைந்து போனது, குர்ஸ்க் எனும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் மூழ்கிப் போனது, அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் என அவர் கணித்த சில நிகழ்வுகள் சரியாக நடந்திருக்கின்றன என சீடர்கள் கூறியிருக்கின்றன.

அந்த வகையில் ஹான்னா கூறியவற்றில் சிலவும் இந்த ஆண்டில் நடந்துள்ளது.

இங்கிலாந்து அரசியின் மரணம், பாடகி டைலர் ஸ்விஃப்ட்டின் திருமண அறிவிப்பு, பிரபல வெப் சீரீஸ் ஆன கிரேஸ் அனாடமியின் இறுதி சீசன், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதிக்கு குழந்தை போன்றவற்றை அவர் கணித்திருந்தார். மேலும் இவர் கணித்தது போலவே கிம் கார்டாஷியன் பீட் டேவிட்சன் பிரிந்தனர்.

Priyanka - Nik Jonas

இவ்வாறு இவர் கூறிய ஆருடங்களில் 11 இதுவரை பலித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி தளம் கூறுகிறது. மிரர் பத்திரிக்கைக்கு ஹான்னா கொடுத்திருந்த பேட்டியில் அவர், "நான் கணித்தவற்றில் இன்னும் சிலவும் நிச்சயம் நடக்கும். ஆனால், அவை நிகழும் சரியான நேரம் குறித்து நான் கூறியது மாறுபடலாம். அனைத்தும் இந்த ஆண்டே நிகழாது, அடுத்து வரும் ஆண்டுகளில் நிச்சயமாக நடக்கும்" என்றார்.

இவர் கணித்திருந்த விஷயங்களில் முதலில் நடந்தது நிக் ஜோனஸ்-பிரியங்கா சோப்ரா தம்பதியின் குழந்தை குறித்தது தான். இந்த நட்சத்திர தம்பதி வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தனர். இவர்கள் குழந்தை குறித்த அறிவிப்பை வெளிப்படுத்திய பிறகு தான் ஹான்னா தன் மற்ற கணிப்புகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

Queen Elizabeth

அடுத்தடுத்து இவர் கூறிய விஷயங்கள் நிகழவே, இவரிடம் ஆருடம் கேட்டு மக்கள் அணுக துவங்கினர்.தற்போது மக்களுக்கு ஆருடம் கூறுவதையே வேலையாக பார்த்து வருகிறார் ஹான்னா.

ஹான்னா அவரிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது காதல், வாழ்க்கை, உடல்நலம், கருவுறுதல் மற்றும் பொது வாழ்க்கை குறித்த கணிப்புகளை சொல்கிறார்

அவர் ஒரு வாரத்திற்கு சுமார் 30 ஆருடங்கள் சொல்லி, சுமார் ரூ.1.36 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

"நான் என்னிடம் வரும் மக்களுக்கு கணித்து கூறிய விஷயங்கள் அப்படியே நடந்திருக்கிறது. இதை அவர்கள் என்னிடம் வந்து பகிர்ந்துகொள்ளும்போது எனக்கு அது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

பாபா வாங்கா

வருங்காலத்தை அறிந்துகொள்ள நேரில் சென்று தான் இவரை சந்திக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. வருங்காலத்தை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், அவர்களது புகைப்படத்தை ஹான்னவிடம் பகிர்ந்தால் போதும். " நான் தனியாக அமர்ந்து அவர்களை பார்ப்பேன். அப்போது என் மனதில் அவர்கள் குறித்து தோன்றும் எனது இன்டியுஷனை சொல்வேன்" என்கிறார்

மேலும், இதனை ஒரு தொழிலாக மாற்ற நான் எப்போதும் நினைத்ததில்லை என தெரிவிக்கும் அவர், தனது இன்டியூஷன்ஸை நம்புவதாகவும், தான் கணித்தவற்றில் அடுத்து என்ன நடக்கும் என தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாவும் தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?