ரஷ்யா: ரஷ்ய அதிபர் புதினின் விமர்சகர்கள் இந்தியாவில் அடுத்தடுத்து மரணம் - என்ன நடக்கிறது?
ரஷ்யா: ரஷ்ய அதிபர் புதினின் விமர்சகர்கள் இந்தியாவில் அடுத்தடுத்து மரணம் - என்ன நடக்கிறது? twitter
உலகம்

Russia: ரஷ்ய அதிபர் புதினின் விமர்சகர்கள் இந்தியாவில் அடுத்தடுத்து மரணம் - என்ன நடக்கிறது?

Keerthanaa R

ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரும், பெரும் பணக்காரருமான பவேல் ஆண்டோவ் என்பவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளார். ஒரே வாரத்தில் இது இரண்டாவது ரஷ்ய அதிகாரியின் மரணம் என்பதால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி ஒடிசாவிலுள்ள ஒரு ஹோட்டலில் ஆண்டோவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட ஒடிசாவின் ராயகாடா பகுதிக்கு வந்திருந்தார் பவேல்.

பவேல் ஹோட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு முன் டிசம்பர் 22 ஆம் தேதி வ்ளாடிமிர் புடானோவ் என்ற மற்றொரு ரஷ்ய நாட்டுக்காரரும் உயிரிழந்திருந்தார்.

மரணித்த இருவருமே ரஷ்ய அதிபர் புதினின் விமர்சகர்கள் ஆவர்

ஓபி இந்தியா செய்தி தளத்தின்படி, டிசம்பர் 21ஆம் தேதி 4 ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஒடிசா வந்தனர்.

அவர்கள் ராயகாடாவிலுள்ள சாய் இண்டெர்னேஷனல் ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்தனர்.

வ்ளாடிமிர் புடானோவ் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்துள்ளார். மற்றும் ஆண்டோவ் ஹோட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளார்

புடானோவ் மாரடைப்பால் மரணித்ததாகவும், ஆண்டோவ் தற்கொலை செய்துகொண்டார் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன

பவேல் ஆண்டோவ் ரஷ்யாவின் அதிகம் சம்பாதிக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவர் மற்றும் பெரும் பணக்காரரும் கூட.

ஆண்டோவ் புதினின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். புதின் உக்ரைன் மீது போர் தொடுத்ததை கடுமையாக அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Putin

புதின் உக்ரைன் மீது தொடுத்த போரினை ‘பயங்கரவாதம்’ என்று கடந்த ஜூன் மாதம் விமர்சித்திருந்தார் ஆண்டோவ்

இறுதியில், பெரும் அழுத்தத்திற்கு ஆளானதையடுத்து அவர் தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டியதாயிற்று.

கல்கத்தாவின் ரஷ்ய கவுன்சில் இந்த மரணங்கள் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!