குதிக்க தெரியாத விலங்கு, கெட்டுப்போகாத உணவு, நடக்க முடியாத பறவைகள் - 20 சுவாரஸ்ய தகவல்கள்! Twitter
உலகம்

குதிக்க தெரியாத விலங்கு, கெட்டுப்போகாத உணவு, நடக்க முடியாத பறவைகள் - 20 சுவாரஸ்ய தகவல்கள்!

நாம் தினமும் பார்க்கும் விஷயங்களில் கூட நாம் கண்டுகொள்ளாத ஆச்சரியமான விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன.

Antony Ajay R

நாம் தினமும் கடந்து செல்லும் பல விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளா விரும்புவதில்லை. ஆனால் அப்படியான சின்ன சின்ன விஷயங்களை ஆராயும் போது நமக்கு ஆச்சரியப்படவைக்கும் தகவல்கள் கிடைக்கும்.

அப்படி நம்மை ஆச்சரியப்படுத்தும் 20 சுவாரஸ்ய தகவல்களைத் தான் இதில் பார்க்கப்போகிறோம்.

  • குதிக்கத் தெரியாத ஒரே விலங்கினம் யானைகள் மட்டும் தான்.

  • கைரேகைகள் போலவே ஒவ்வொரு மனிதருக்கும் நாக்கின் ரேகைகள் மாறுபட்டிருக்கும்.

  • கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே!

  • மூச்சை நிறுத்தி நம்மை நாமே கொல்ல முடியாது.

  • கீபோர்டில் உள்ள ஒரே வரிசை எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதக் கூடிய மிக நீளமான ஆங்கில சொல் Typewriter

  • நாம் தும்மும் போது கடவுளின் பெயரை சொல்லச் சொல்வது ஏன் தெரியுமா? தும்மல் வரும் ஒரு நொடி நம் இதயம் நிற்கும்.

  • உடலில் உள்ள நீளமான தசை நம் நாக்கு தான்.

  • உலகில் அதிகபேர் பயன்படுத்தும் பெயர் முகமது.

  • கார்பன் மோனாக்சைடு ஒரு மனிதரை 15 நிமிடத்தில் கொன்றுவிடும்.

  • பாலூட்டிகளின் இரத்தம் சிகப்பு நிறம். பூச்சிகளுக்கு மஞ்சள் நிறம், இறாலுக்கு நீள நிறம்.

  • ஹம்மிங்பேர்ட், லூன், ஸ்விஃப்ட், கிங்ஃபிஷர் மற்றும் கிரெப் ஆகிய அனைத்தும் நடக்க முடியாத பறவைகள்.

  • உலகிலேயே வேகமான பறவை பெரேக்ரின் ஃபால்கன். மணிக்கு 386 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.

  • பூச்சிகளில் தும்பிதான் வேகமானது. 80 முதல் 96 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்

  • சினிமாவில் வரும்  எலெக்ட்ரிக் சேரை கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர்

  • ஒரு பூனையின் உடலில் உள்ள எலும்பில் 10% அதன் வாலில் உள்ளது.

  • அண்டார்டிக்காவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பயிரிடப்படும் தானியம் சோளம்.

  • நம் புலன்களில் மிகவும் வேகமானது கேட்கும் திறன் தான். 0.05 வினாடிகளில் சத்தத்தை நம்மால் உணர முடியும்.

  • aeiou ஆகிய உயிரெழுத்துகள் இல்லாத நீளமான ஆங்கில வார்த்தை Rhythm.

  •  மனித தொடை எலும்புகள் கான்கிரீட்டை விட உறுதியானவை.

  • ஆங்கிலத்தில் பூமிக்கு வைக்கப்பட்டுள்ள Earth என்ற பெயர் மட்டும் தான் கடவுளின் பெயர் இல்லை. பிற கோள்களின் பெயர்கள் எல்லாம் கடவுள்களை முன்னிட்டு வைக்கப்பட்டவை.  

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?