”முகங்களையோ.. உடல் நிறங்கலையோ.. இது பார்க்காதே” என்று 54 வயது முதியவரை மணக்க காதலனுடனான திருமணத்தை 24 வயது பெண் ஒருவர் நிறுத்திய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 24 வயது அமண்டா கேனான் என்ற பெண், 54 வயதான டேவிட் ஏஸ் என்பவரை 2017 இல் சந்தித்திருக்கிறார்.
விவாகரத்து பெற்ற ஏஸ், மீண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார். ஆனால் அமண்டாவை சந்தித்த பிறகு தனது முடிவை மாற்றி கொண்டுள்ளாராம் அந்த முதியவர்.
இந்த ஜோடி 4 வருடங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்து கடைசியாக 2021 ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அமண்டா தன் காதலை அவரிடம் கூறியிருக்கிறார், அதே நேரத்தில் ஏஸும் அமண்டாவின் அழகில் ஈர்க்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
டெய்லி ஸ்டார் அறிக்கையின்படி, ஏஸ் தனது முந்தைய திருமணத்திலிருந்து இரண்டு குழந்தைகளான பெய்டன், 21, மற்றும் கேட், 20, ஆகியோருக்கு அப்பா ஆவார், ஆனால் வயதான கணவனாக இருப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
டேவிட் ஏஸ் வயதை காரணம் காட்டி குழந்தையையும் சாடுவார்கள் என்றெல்லாம் பேசுவதாக சொல்கிறார்கள் ஆனால் அதில் எல்லாம் உண்மை இல்லை. 90 சதவீதத்தை எங்களுடைய வாழ்க்கை ஆதரவாக இருக்கிறார் என்று அமண்டா கூறி இருக்கிறார்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டு தனது கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்த நபருடனான திருமணத்தை ஏஸுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு நிறுத்தியிருக்கிறார் அமண்டா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust