நம் கனவுகளை அடைய, நாம் நினைத்ததை செய்து முடிக்க தன்னம்பிக்கை ஒன்று மட்டுமே போதுமானது, வேறு எந்த ஒரு சக்தியும் நம்மை தடுக்க முடியாது என்பதற்கு சான்றாக சாதனை படைத்த பலரை நாம் கடந்திருக்கிறோம்.
புடவை அணிந்துகொண்டு புல்லட்டில் உலகம் சுற்றும் பெண்மணி, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் 50 வயது தாய், தன்னந்தனியாக 60 வயதில் பசிபிக் கடலை சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதியவர்... என இந்த பட்டியல் ஏராளம்.
அந்த வரிசையில் தற்போது பேசுபொருளாகியிருப்பது, மதுஸ்மித்தா ஜெனா என்கிற பெண்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் மதுஸ்மித்தா. இவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவர் மான்செஸ்டரில் நடந்த மாரத்தானில் கலந்துகொண்டு ஓடியுள்ளார். மொத்தம் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடியவர், 42.5 கிமீ தூரத்தை கடந்து முடித்தார்.
பெண்கள் மாரத்தான் ஓடுவதோ, இல்லை இவ்வளவு தூரம் ஓடுவதோ ஊர் உலகில் நடக்காத அதிசயமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
விஷயம் அவர் மாரத்தானில் ஓடியதல்ல. இவர் மாரத்தான் ஓடும்போது அணிந்திருந்த உடை.
இந்திய வம்சாவளி பெண்ணான, ஒடிசாவை சேர்ந்த மது, சம்பல்புரி கைத்தறி புடவை அணிந்துகொண்டு இத்தனை தூரத்தை கடந்திருக்கிறார்.
நடைப்பெற்ற மாரத்தான், இங்கிலாந்து இரண்டாவது பெரிய மாரத்தானாகும்.
புடவை அணிந்துகொண்டு மாரத்தானில் ஓடிய 41 வயது பெண் அனைவரது கவனத்தையும் பெற்று, பாராட்டு மழையில் தத்தளித்து வருகிறார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின் படி, மது இதற்கு முன்னரும் உலகளவில் பல மாரத்தான்களில் கலந்துகொண்டிருக்கிறார், மேலும் வட மேற்கு இங்கிலாந்து ஒடியா சமூகத்தின் உறுப்பினர்.
”புடவையில் மாரத்தான் ஓடியே ஒரே பெண் நான் தான். இத்தனை தூரத்தை ஓடி கடப்பது சவாலான ஒன்றாக இருந்தாலும், புடவை அணிந்துகொண்டு ஓடுவது இன்னும் கடினமாக இருந்தது. என்னால் மொத்த தூரத்தையும் கடக்க முடிந்ததில் மகிழ்ச்சி”
தனது தாய் மற்றும் பாட்டி தினந்தோறும் புடவையே அணிந்து அனைத்து விதமான வேலைகளையும் செய்து வருவதை பார்த்து வளர்ந்தது தான், புடவை அணிந்து இந்த மாராத்தானில் ஓட முக்கிய ஊக்கமாக இருந்தது எனவும் மது கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust